பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

327


மதுரை மாநகரில் அமைந்த (கடவுட்பள்ளியைத் தெய்வத் திருக்கோயில்களைக் குறிப்பிடும் நிலையில் அத்திருக்கோயில் களில் எழுந்தருளியுள்ள தெய்வங்கட்கெல்லாந் தலைமை யுடைய தெய்வமாகவும் நிலம் தீ நீர் வளி விசும்பு என்னும் ஐம்பெரும் பூதங்களாலியன்ற உலகினை முதன் முதற் படைத்தருளிய முழு முதற்கடவுளாகவும் மழுவாகிய வாட்படையினையுடைய சிவபெருமானைச் சிறப்பித்துப் போற்றியுள்ளார்.

“நீரும் நிலனும் தீயும் வளியும்

மாக விசும்போ டைந்துட னியற்றிய மழுவாள் நெடியோன் தலைவன் ஆக மாசற விளங்கிய யாக்கையர் சூழ்சுடர் வாடாப்பூவின் இமையாநாட்டத்து நாற்ற வுணவின் உருகெழு பெரியோர்க்கு மாற்றரு மரபின் உயர்பல் கொடுமார் அந்தி விழவில் துரியம் கறங்க (மதுரைக், 453-450)

என வரும் மதுரைக் காஞ்சித்தொடர், மதுரை மாநகரில் உள்ள திருக்கோயில்களின் மாலைவழிபாட்டினைக் குறிப்பதாகும். “திக்குக்களையுடைய ஆகாயத்துடனே காற்றும் நெருப்பும் நீரும் நிலமும் ஆகிய ஐம்பெரும் பூதங்களையும் சேரப்படைத்த மழுவாகிய வாட்படையினை யுடைய பெரியோன் (மகாதேவன்) ஏனையோரின் முதல்வனாகக் கொண்டு தீர்த்தமாடிய வடிவினை யுடையராய்த் தெய்வத்தன்மையாற் சூழ்ந்த ஒளியுடைய வாடாத பூக்களையும் இதழ்குவியாத கண்ணினையும் அவியாகிய உணவினையும் உடைய அச்சம் பொருந்திய மாயோன் முருகன் முதலாகிய தெய்வங்கட்கு விலக்குதற்கு அரிய முறைமையினையுடைய அந்திக் காலத்துக்கு முன்னாக எடுத்த விழாவிலே து ரியம் (பலவகை வாத்தியம்) ஒலிக்க” என்பது மேற்காட்டிய தொடரின் பொருள்.

மதுரை மாநகரிலே மழுப்படையினையேந்திய சிவபெருமானைத் தலைமைக் கடவுளாகக் கொண்டு மாயோன் சேயோன் முதலிய தெய்வங்கள் எழுந்தருளிய