பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


வாய்ந்த நூலென்றும் அஃது ஒருவராலும் இயற்றப்படாதது (அபெளருஷேயம்) என்றும் கூறுவர் வேதவாதிகள். இக்கொள்கை,

“கற்பங்கை, சந்தங்கால், எண்கண்.

தெற்றெ னிருத்தஞ்செவி, சிக்கை மூக்கு, உற்றவியாகரணம் முகம் பெற்றுச் சார்பிற்றோன்று ஆரண வேதக்கு ஆதியந்தம் இல்லை அது நெறியெனும் வேதியன் உரையின் விதியுங்கேட்டு”

(மணி. சமயக் 100-105)

என மணிமேகலையாசிரியர் சாத்தனார் கொண்டெடுத்து மொழியும் வேதவாதியின் உரையில் இடம் பெற்றிருத்தல் அறியத் தகுவதாகும். இத்தொடரில் சார்பில்தோன்றா’ என்றது, நூலாசிரியர் ஒருவர் வாயிலாகத் தோன்றாத தானே தோன்றிய என்னும் பொருளில் வழங்கப் பெற்றது. எனவே ஒருவராலும் செய்யப்படாத நூல் வேதம் என்பது வேதவாதியர் கொள்கையாதல் நன்கு தெளிப்படும். "செய்யாமொழிக்கும் திருவள்ளுவர் மொழிக்கும் (42) எனவரும் திருவள்ளுவமாலைப் பாடலும் இதனை வலியுறுத்துவதாகும். வடநாட்டில் தோன்றிய சமன பெளத்த சமய வாதிகளால் வேத வேள்விகள் எதிர்க்கப் பட்டுச் சிதைவுறும் இழிநிலையேற்பட்டபோது, தென் னாட்டில் வாழ்ந்த வேதநெறியாளராகிய அந்தணர்கள் கடவுட் கொள்கையை உறுதியாகப் பற்றிக்கொண்டு, ‘முழுமுதற் கடவுளாகிய முதல்வனால்அருளிச் செய்யப் பெற்றனவே ஆறங்கங்களால் உணர்தற்கரிய அருமறையாகிய வேதங்கள்’ எனவும் உலகியல் ஒழுக்கமாகிய வேதத்தை அருளிச் செய்த இறைவனை வேதமுதல்வன் எனவும் தெளிவுபட எடுத்துக் கூறிப்புத்தம் சமணம் முதலிய புறச்சமய வாதிகளை உறழ்ந்து வாதில்வென்று, இந்நாட்டின் தொன்மைவாய்ந்த தெய்வங்கொள்கையைச் சார்பாகக் கொண்டு மன்னர்களும் மதித்து ஏற்றுக்கொள்ளும் வண்ணம் வேதவேள்விகளைச் சிறப்புடன் செய்து வைதிக நெறியினை நன்கு வளர்த்து வந்தனர். இச்செய்தி,