பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


காணலாம்.

சிவபெருமானைப் போற்றிப் பெருந்தேவனார் பாடிய, மேற்குறித்த கடவுள் வாழ்த்துப் பாடல்கள் மூன்றிலும் இறைவனாகிய சிவபெருமான் ஒருவனே ஆணும் பெண்ணும் என இருவடிவினையும் ஒருங்கே பெற்றுப் பிரிவின்றி விளங்கும் திறமும் அவனது திருவடியினை ஆதாரமாகக் கொண்டு உலகம் தோன்றி நிலைபெற்று ஒடுங்கும் முறையும் கொன்றை மலர் மாலை அம்முதல்வனுக்குரிய அடையாள மாலையாதலும் அந்தணனாகிய அவன் மார்பில் நுண்ணுரல் திகழ்தலும் நெற்றிக் கண்ணினையுடைய அம்முதல்வன் கணிச்சி, மழு. மூவாய்வேல் ஆகிய படைக்கலங்களை யேந்தியுள்ளமையும் சிவபெருமான் வெள்ளைநிறம் வாய்ந்த ஆனேறாகிய இடபத்தினை ஊர்தியாகவும் கொடியாகவும் கொண்டுள்ளமையும் செம்மேனியம்மானாகிய அவன் தன் சடையில் பிறைத்திங்களையணிந்துள்ளளமையும் நஞ்சக் கறை பொருந்திய திருநீலகண்டத்தையுடையனாதலும் புலித்தோலை உடையாகவுடுத்துள்ளமையும் நீர்குறைத லறியாத குண்டிகையைத் தாங்கிய அரிய தவக்கோலத்தினை யுடைய அம்முதல்வன் எல்லாவுயிர்கட்கும் பாதுகாவலாய் விளங்கும் அருளின் திறமும் விரித்துரைக்கப் பெற்றுள்ளமை காணலாம். இங்ங்னம் உலகம் தோன்றிநின்று ஒடுங்குதற்கும் மன்னுயிர்கள் துன்பந்தவிர்ந்து இன்பமே எந்நாளுந் துன்பமில்லை என அமைதியான பேரின்ப வாழ்வைப் பெறுதற்கும் காரணமாகிய இறைவன் திருவடிகள் மனமொழி மெய்களால் வணங்குவார்க்கு அறம்பொருள் இன்பம் வீடு என்னும் நான்கினையும் ப்யக்கும் என்பது இக்கடவுள் வாழ்த்துப் பாடல்களின் கருத்தாகும்.

உமையொருபாகன்

- உலகுயிர்களை இயக்கியருளும் ஒப்பற்ற பேரறிவுப் பொருளாகிய முழுமுதற் பொருள் ஒன்றே என்பது தமிழ் முன்னோர் கொள்கையாகும். ஒருவனே தேவனும் எனவரும் திருமூலர் வாய்மொழியும், ஒருவன் என்னும் ஒருவன் காண்க திருவாசகம்) எனவரும் திருவாதவூரடிகள்