பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


என உலகத் தோற்றத்தைப் பற்றியும், யாழ்கெழு மணிமிடற்று அந்தணன், தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே என உலகின்நிலை பேறுபற்றியும், பெண்ணுரு வொருதிற னாகின்ற அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் என உலகின் ஒடுக்கம் பற்றியும் பெருந்தேவனார் குறிப்பிடுதலால் இனிது விளங்கும்.

தனிமுதலாகிய இறைவன், தனது ஒருமையில் சத்தியும் சிவமும் என இருமைத் தன்மையனாய் அம்மை யப்பராகத் தோன்றி உயிர்கட்கு அருள்புரியுந்தொன்மைத் திருக்கோலத்தின் இயல்பினை இறையருளால் உணரப்பெற்ற செம்புலச் செல்வராகிய திருவாதவூரடிகள், அம்மையே அப்பா ஒப்பிலாமணியே என அகங்குழைந்து போற்றிய துடன் தாம் கண்ட தெய்வக்காட்சியை ஏனையோரும் உணர்ந்து போற்றுதல் வேண்டும் என்னும் பெருவேட்கை யுடன், -

“தோலுந்துகிலும் குழையுஞ் சுருள்தோடும்

பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும் சூலமுந் தொக்க வளையும் உடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்து தாய் கோத்தும்பீ

(திருக்கோத்தும்பி)

எனவரும் திருப்படலிற் புனைந்து போற்றியுள்ளமையும், சீகாழிப்பதியில் பிரம தீர்த்தக்கரையில் நின்றுகொண்டு நீரில் முழுகும் தந்தையாரைக் காணாத நிலையில் திருத்தோணிச் சிகரம் பார்த்து அம்மே அப்பா என அழுதருளிய கவுணியப் பிள்ளையார்க்குத் தோனின புரத்து இறைவன் தோடுடைய செவியனாகி (அம்மையப்பராகி) விடைமேல் தோன்றிச் சிவஞானப்பால் அருத்தியருளிய திருவருட்செயலும், இவ்வாறே திருத்தொண்டத் தொகையிற் போற்றப்டெ றும் அடியார் பலர்க்கும் அம்மையப்பனாக விடைமேல் தோன்றி அருள் புரிந்த நிகழ்ச்சிகளும் திருத்தொண்டர் புராணத்தில் விரித்துரைக்கப் பெற்றுள்ளமையும் இங்கு உளங்கொளத் தக்கனவாகும்.