பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தேயுடைய சிவபெருமான், வருத்தத்தைச் செய்த ஏறாகிய எருமையை யூர்தியாகவுடைய கூற்றுவ னுடைய மார்பைப்பிளந்து அவன் குடரைக் கூளிகளாகிய பேய்க்கு இட்டு அவற்றின் வயிற்றை நிறைவித்தாற்போலும் எனக் காலகாலனாகிய இறைவன் ஊழி முடிவிலே கூற்றுவனைக் கொன்ற செயலை உவமையாகக் காட்டும் நிலையில் அமைந்தது.

§

"சுடர் விரிந்தன்ன சுரிநெற்றிக்காரி விடரியங்கண்ணிப்பொதுவனைச் சாடிக் குடச்சொரியக்குத்திக் குலைப்பதன் தோற்றங்காண் படரணியந்திப் பசுங்கட் கடவுள் இடரிய ஏற்றெருமை நெஞ்சிடந்திட்டுக் குடர் கூளிக் கார்த்துவான் போன்ம்' (கலி. 101)

எனவரும் கலித்தொகைப் பகுதியாகும். “மதிவிரிந்தாற் போன்ற சுட்டியை நெற்றியிலேயுடைய கரிய எருது முழைஞ்சினையுடைய மலையிற் பூவாற்செய்த அழகை யுடைய முடி மாலையையணிந்த ஆயனாகிய வீரனைக் காலால் துகைத் துக் குடர் சரியும்படி குத்திக் கொம்பி னிடத்தே கொண்டு குலைப்பதன் தோற்றத்தைக் காண்பாயாக, பல்லுயிரும் வருத்தத்தை அணிகின்ற ஊழிமுடிவிலே பசிய நிறத்தைத் தன் (இடப்) பாகத்தே யுடைய சிவபெருமான், வருத்தத்தைச் செய்த காளையாகிய எருமையை பூர்தியாகவுடைய கூற்றுவனது மார்பைப் பிளந்து வீழ்த்தி அவன் உயிரைப் பேய்ச்சுற்றத்திற்கு இட்டு அவற்றின் வயிற்றை நிறைவிக்கின்ற வினைபோலும்” என்பது இதன்பொருள். இங்கு எருமையென்றது எருமையை யூர்தியாகவுடைய கூற்றுவனைக் குறித்தது, ஆகுபெயர்.

பிறையணிந்தது

தக்கன் புதல்வியராகிய விண்மீன்கள் இருபத்தெழு வரையும் மணந்துகொண்ட சந்திரன், அவருள் உரோகிணி யின்பால் மட்டுமே பேரன்பு செலுத்துபவனாய் ஏனை யோரைப் புறக்கணித்து ஒழுகினான். அதனையறிந்த தக்கன்