பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

361


கல்லோங்கு நெடுவரை' என்றது, சிவபெருமான் எழுந்தருளிய திருக்கயிலாய மலையினையேயெனக் கொள்ளுதல் பெரிதும் பொருத்தமுடையதாகும். 'கயிலாயத்துச்சியுள்ளான்' என அப்பரடிகளும் 'மானக், கயிலை மலையாய் போற்றி என வாதவூரடிகளும் அருளிய வாய்மொழிகள் இங்கு ஒப்புநோக்கற் பாலனவாகும்.

இராவணனை அடர்த்தருளியது

இலங்கை வேந்தனாகிய இராவணன், தேரூர்ந்து வடதிசையிற் செல்லுங்கால் அவனது தேர் செல்ல வொண்ணாதபடி இறைவன் எழுந்தருளிய கயிலாய மலை தடையாயிருத்தலைப் பொறாது தன்னுடைய இருபது கைகளாலும் அம்மலையைப் பெயர்த்தெடுக்க முற்பட்ட போது கயிலைப்பெருமானாகிய இறைவன் தன் திருவடிப் பெருவிரலொன்றினால் சிறிதேயழுத்த மலையிற்சிக்குண்டு அலறியழுது பின்னர் இறைவனுக்கு உவப்பாகச் சாம வேதத்தினை இசையுடன் பாடிப்போற்றினானாக அதுகண்டு உளமிரங்கிய இறைவன் அவனுக்கு முக்கோடி வாழ்நாளும் பகைவரைக் கொல்லும் கோலவாளும் கொடுத்தருளினார் என்பது, இராமாயணத்தும் புரானங்களிலும் சைவத் திருமுறைகளிலும் கானப்படும் செய்தியாகும். திருக்கயிலாயம் இறைவன் எழுந்தருளிய திருமலை என்பதனைச் சிறிதும் மதியாத இராவணன், அம்மலையினைத் தன்னுடைய கைகளால் அடியோடு பெயர்த்தெடுக்கத் தொடங்கி அம்மலைக் கீழகப்பட்டு அதனை எடுக்கலாற்றாது உழன்ற இடர்நிலையை மதயானையொன்றின் செயலுக்கு உவமையாக எடுத்துக் காட்டும் முறையில் அமைந்தது.

"இமயவில் வாங்கியவர்ஞ்சடையந்தணன்

உமையமர்ந்துயர் மலையிருந்தனனாக ஐவிருதலையின் அரக்கர் கோமான் தொடிப்பொலிதடக்கையிற் கீழ்புகுத்தம்மலை எடுக்கல் செல்லா துழப்பவன்போல உறுபுலி யுருவேய்ப்பப் பூத்தவேங்கையைக் கறுவு கொண்டதன் முதற்குத்திய மதயானை