பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

363


காலத்தில் திருவாரூரில் திருவாதிரைத் திருவிழாச் சிறப்பாக நிகழ்ந்த திறத்தை நேரிற்கண்டு மகிழ்ந்த திருநாவுக்கரசர் அதன் சிறப்பினைத் திருஞான சம்பந்தப் பிள்ளையார்க்கு எடுத்துரைக்கும் முறையிற் பாடப்பெற்றது 'முத்துவிதான மணிப் பொற்கவரி' எனத் தொடங்கும் திருவாதிரைத் திருப்பதிகமாகும்.

திருவாதிரைத் திருவிழாவும் அம்பா ஆடலும்

மக்களால் ஒராண்டு என வரையறுக்கப்படும் காலம் தேவர்கட்கு ஒருநாளாகும். ஆடி முதல் மார்கழி முடிய வுள்ள ஆறு திங்களும் வானோர்க்கு இரவுப்பொழுது, தை முதல் ஆனி முடிய ஆறு திங்களும் அவர்கட்குப் பகற் பொழுது. இவ்வகையில் நோக்கும்போது மார்கழித் திங்கள் வானோர்க்குரிய வைகறைப் பொழுதாகக் கருதப்படும். கூத்தப் பெருமான் திருவுருப்போன்று ஒளிரும் செம்மீனாகிய திருவாதிரையானது, நிறைமதியுடன் கூடி விளங்கும் சிறப்புடைய திருநாளாகத் திகழ்வது மார்கழித் திங்களில் ஆதலின் மார்கழித் திருவாதிரைத் திருநாள் சிவபெருமானுக்குரிய சிறப்புடைய திருவிழா நாளாகக் கொண்டாடப்பெற்று வருகிறது. இத்திருவிழாவின் சிறப்பினைப் பதினோராம் பரிபாடலில் ஆசிரியர் நல்லந்துவனார் பின்வருமாறு விரித்துக் கூறுகின்றார் :

'கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கப்

பனிப்படு பைதல் விதலைப்பருவத்து ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து மாயிருந்திங்கள் மறுநிறை ஆதிரை விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப் புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப வெம்பாதாக வியனில வரைப்பென அம்பா வாடலின் ஆய்தொடிக் கன்னியர் முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப் பனிப்புலர் பாடிப்பருமண லருவியின் ஊதை பூர்தர வுறைசிறை வேதியர் நெறிநிமிர் நுடங்கழல்பேனிய சிறப்பிற்