பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

365


தடுத்துச் செய்ததன் பயன்தானோ தம்தாயின் அருகே நின்று தவமாகிய தைந்நீராடல் நோன்பினை நின்கண் செய்யப்பெற்றனர்? வையையே கூறுவாயாக" என வையையாற்றை நோக்கி வினவுவதாக அமைந்தது,

“மையாடலாடல் மழபுலவர் மாறெழுந்து

பொய்யாடலாடும் புணர்ப்பினவரவர் தீயெரிப்பாலுஞ் செறிதவமுன்பற்றியோ தாயருகா நின்று தவத்தைந்நீராடுதல் நீயுரைத்திவையைந்தி” (பரி. 11: 88-92)

எனவரும் பரிபாடற் பகுதியாகும்.

இங்கு எடுத்துக்காட்டிய பதினோராம் பரிபாடற் பகுதி மார்கழி மாதத்துத் திருவாதிரைத் திருவிழாவை யொட்டி நிகழும் மகளிர் நோன்பாகிய அம்பாவாடலின் நிகழ்ச்சியை விரித்துரைப்பதாகும். இப்பாடலில் 'குளம்' என்றது, மார்கழி மாதத்தை. திருவாதிரை நிறைமதி நாளாங்கால் ஆதித்தன் (ஞாயிறு) பூந்தடத்தின் கண் (புனர்பூசத்தின்) நிற்குமாதலின் அதனையுடைய மார்கழி மாதம் 'குளம் எனப்பட்டது என்பர் பரிமேலழகர்.

மார்கழித் திருவாதிரையில் தொடங்கி நிகழும் மகளிர் நேர்ன்பாகிய அம்பாவாடல் தைத் திங்களில் நிறைவு பெறுதலின் தைந்நீராடல் எனவும் வழங்கப்படும். தாயருகாநின்று இளமகளிர் ஆடுதலின் அம்பா ஆடல் எனப்பட்டது. “அம்பா ஆடல் என்று தைந்நீராடற்குப் பெயராயிற்று, தாயோடு ஆடப்படுதலின்” என்பர் பரிமேலழகர். அம்பா - தாய், தாயருகாநின்று தவத் தைந்நீராடலின்’ என்பர் நல்லந்துவனார். இத் தொடரில் 'தாய்’ என்றது, உலகம் ஈன்ற தாயாகிய பராசத்தியை எனக் கொள்ளுதல் கன்னி மகளிர் பராசத்தியை வழிபட்டு நோற்கும் நீராடல் நோன்பிற்கு மிகவும் பொருத்த முடையதாகும். சிவபெருமானுக்குரிய திருவிழாவை யொட்டி உமையம்மையை வழிபட்டு நோற்கும் நீராடல் நோன்பு நிகழ்வது அம்மையப்பர் வழிபாட்டின் ஒற்றுமைத் திறத்தை நன்கு புலப்படுத்துவதாகும்.