பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

367


& so - -

வெம்பாதாக வியனில வரைப்பென

அம்பாவாடலின் ஆய்தொடிக் கன்னியர்”

எனவரும் தொடரில் ஆசிரியர் நல்லந்துவனார் சிறப்பாகக் குறித்துள்ளமை காணலாம்.

சிவநெறியும் வேதநெறியும்

விரிநூலந்தனர் திருவாதிரைக்குத் தெய்வமாகிய இறைவனுக்கு விழாவைத் தொடங்கி நிகழ்த்தினர் எனவும் அவ்விழாவில் மக்கள் தானப்பொருள்களைப் புரி நூலந்தனர் ஏற்றனர் எனவும் ஆசிரியர் நல்லந்துவனார் பதினோராம் பரிபாடலிற் குறிப்பிடுதலால் அவர் வாழ்ந்த காலமாகிய சங்க காலத் தமிழகத்தில் இருவகை யந்தனர் களும் வாழ்ந்தனர் என்பது நன்கு புலனாகும். அவ்விரு திறத்தாருள் விரிநூலந்தனர் எனப்படுவார் ஆகமங்களை யுணர்ந்த பூசகர் என்பர் பரிமேலழகர். எனவே கோயிற் பூசகராகிய சிவாசாரியரின் வேறாகக் கூறப்படும் புரிநூ லந்தனர் என்போர் வேதங்களை யோதும் வேதியர் என்பதுதானே விளங்கும். ஆகமங்கள் கடவுள் உயிர் உலகு என்னும் முப்பொருள்களின் இயல்பினை விரித்துரைக்கும் நூல்களாதலின் விரிநூல் எனப்பெற்றன. ஆகமவிதிகளை நன்குனர்ந்து திருக்கோயில்களில் சிவபெருமானுக்குப் பூசனையும் திருவிழாவும் நிகழ்த்தும் விரிநூல் அந்தணர்கள் சங்ககாலத்தில் இருந்தனர். எனவே அவர்களால் ஒதியுணரப் பட்டுக் கற்றவண்ணம் ஒழுகும் முறையினை அறிவுறுத்தும் சிவாகமங்களும் அவர் காலத்தில் தமிழகத்தில் வழங்கினமை நன்கு பெறப்படும். விரிநூலந்தனராகிய சிவநெறிச் செல்வர் தொடங்கி நிகழ்த்தும் திருவாதிரை விழாவிற் புரிநூலந்தனராகிய வேதியர்களும் கலந்து கொண்டமை கூறப்படுதலால் சங்க காலத்தில் சைவமும் வைதிகமும் ஆகிய இருவகை நெறிகளும் முறையே சிறப்பும் பொதுவுமாகக் கலந்து தமிழக மக்களாற் பேணப்பட்டு வளர்ந்தமை உய்த்துணரப்படும்.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெரு