பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

371


என்று சொல்லும்படியாக அழித்தற்றொழிலை நிகழ்த்து கின்ற காலங்களிலே (தாளத்தின் தொடங்கும் காலமாகிய) பாணியும், (இடைநிகழுங் காலமாகிய) துக்கும், (முடியுங் காலமாகிய) சீரும் என்று கூறப்படும் இவற்றை மாட்சிமைப் பட்ட அணிகலங்களையுடைய உமாதேவி உடனிருந்து காப்ப ஆடல்புரிந்து, காத்தற்றொழிலை நிகழ்த்துகின்ற இக்காலத்தே ஒருவடிவைக் கொண்டு தோன்றி அன்பில்லாத பொருளாகிய எங்களுக்குப் பொருந்திக் காட்சி நல்கினாய். இவ்வாறு யாவராலும் காணுதற்கு அரிய கடவுளாகிய நீ, ஆனம் (அன்பு) இல்லாத உயிர்ப்பொரு ளாகிய எமக்கு எளியனாய்த் தோன்றி யருளுதற்கு எம்மிடத்து எதனையும் எதிர்பாராத நினது பேரருளே காரணமாகும்” என்பது இக் கடவுள் வாழ்த்துப் பாடலின் பொருளாகும்.

வேதங்களை முனிவர்க்கு அருளிச்செய்தது, கங்கையைச் சடையிற்கரந்தருளியது, திரிபுரங்களை யெரித்தது, நஞ்சினையுண்டு நீலமணிமிடற்றன் ஆனது ஆகிய சிவனுடைய அருட் செயல்கள் இக்கலியின் தரவில் தொகுத்துரைக்கப்பெற்றன.

“கூறாமற் குறித்ததன் மேற்செல்லும் ..................... எண்கையாய்” என்ற தொடர் இறைவனது சொரூப லக்கணம் எனப்படும் சிறப்பிலக்கண்த்தினைப் புலப்படுத்தி நின்றது. “வாக்காற் கூறப்படாமல் மனத்தாற் குறித்த அப்பொருட்கும் எட்டாமல் மாற்றம் மனம் கழிய நின்ற இறைவன், அன்பினால் வழிபடுவோரது உள்ளத்தின்கண் என் தோள்வீசி நின்று ஆடும்பிரானாகத் தோன்றி அருள்புரிகின்றான்” என்பது, இக்கலித்தொகைத் தொடரால் உணர்த்தப்படும் இறைவனது சிறப்பிலக்கண மாகும்.

இங்ங்னம் உயிர்களின் சுட்டறிவினால் ஆராய்ந்து காணுதற்கரிய தன்மையும் அன்புடையாரது நினைவி னின்றும் என்றும் நீங்காது நிலைபெறும் அருளின் நீர்மையும் இறைவனுக்குரிய சிறப்பிலக்கணமாதலைக்