பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


பிறைநுதல் விளங்கும் ஒருகண்போல வேந்து மேம்பட்ட பூந்தார் மாற" (புறம், 55)

என வரும் தொடரில் மதுரை மருதன் இளநாகனார் உவமையாக எடுத்துக்காட்டியுள்ளார். “கறை சேர்ந்த திருமிடற்றையுடைய இறைவனது அழகிய திருமுடிட் பக்கத்து அணிந்த பிறை சேர்ந்த திருநெற்றிக் கண்னே விளங்கும் ஒரு திருநயனம் போல சேர சோழ பாண்டியர் ஆகி மூவேந்தருள்ளும் மேம்பட்டு விளங்கும் பொலிவு பெற்ற மாலையையணிந்த பாண்டியனே' எனப் பாண்டியன் இலவந்திகைட் பள்ளித்துஞ்சிய நன்மாறனை முடிவேந்தர் மூவருள்ளும் முதன்மை பெற்றுயர்ந்தவனாகப் புகழ்ந்து போற்றுவதாக அமைந்தது மேற்குறித்த புறநானூற்றுத் தொடராகும். உலகினைப் படைத் தளித்தழிக்குடி கடவுளர் மூவரினும் முதல்வனாகச் சிவபெருமானே உயர்ந்து விளங்கும் இறைமைத் தன்மை யினையுடையார் என்பது, மாலும் அயனும் ஆகிய ஏனை யிருவர்க்கும் இல்லாத இமையா நாட்டமாகிய நெற்றிக் கண்ணுடைமையால் உய்த்துணரப்படும். இறைவனை முக்கண்ணனாகத் திருவுருவமைத்து வழிபடும் மரபு இந்நாட்டின் நெடுங்காலமாக நிலைபெற்றுள்ளமை அரப்பா, மொகஞ்சதரோ ஆகிய இடங்களில் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியால் நன்கு வலியுறுத்தப் பெற்றதாகும்.

ஏற்றுார்தியான், ஆனேற்றுக்கொடியோன்

தூய வெள்ளை நிறம் வாய்ந்த ஆனேறு ஆகிய

இடபம் சிவபெருமானுக்குரிய ஊர்தியாகவும் கெ. டியாகவும் தொன்றுதொட்டுப் போற்றப்பெற்று வருகின்றது. இச்செய்தி,

'ஊர்தி வால்வெள்ளேறே சிறந்த

சீர்கெழு கொடியும் அவ்வறு என்ப" (புறம். கடவுள்)

"ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே’ (அகம். கடவுள்)

'உருவ ஏற்றுர்தியான்' (கலித். பரிபாடல் 6)

"புங்கவம ஊர்வோன்' (பணி.)