பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


நாராயணர்) திருமேனியும் சிவபெருமானுக்குரிய திருமேனிகளுள் ஒன்றாகக் கருதி வழிபடப்பெற்றதென்பது இங்கெடுத்துக் காட்டிய அகநானூற்றுப் பாடற்பகுதியால் இனிது விளங்கும். இதனால் சிவன் திருமால் வழிபாடுகளுக்கிடையேயமைந்த ஒருமைப்பாடும் நன்கு புலனாதல் காணலாம்.

இங்ங்ணம் சிவபெருமானும் திருமாலும் ஒருருவாய் உடன் இயைந்து தோன்றும் திருவுருவத் தோற்றத்திற்கு உவமை கூற எண்ணினால் பொன்மலையும் நீலமலையும் ஒருங்கியைந்து நீண்டுயர்ந்து நிற்கின்ற தோற்றத்தினை உவமையாகக் கூறுதல் பொருந்தும் என்பார்,

‘மின்போலுஞ் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால் என்போலும் காண்டார்கட் கென்றிரேல் - தன்போலும் பொற்குன்றும் நீலமணிக்குன்றுத தாமுடனே நிற்கின்ற போலும் நெடிது" (அற்புத் திருவந்தாதி83)

என்று அருளிச் செய்தார் காரைக்காலம்மையார். "மின்னலையொத்து மிளிரும் சிவந்த சடையினையுடைய சிவபெருமான் (தனது ஒருபாகத்தில் விளங்கும் காத்தற் கடவுளாகிய) திருமாலோடும் இங்கு இசைந்து எழுந்தருளினால் அத்தெய்வத் தோற்றம் காண்பார்க்கு எங்ங்னம் திகழும் எனக் கேட்பீராயின், தனக்குத் தானேயொப்பென விளங்கும் பொன்மலையும் நீலநிறம் வாய்ந்த மணிமலையும் ஒருங்கியைந்து மிகவுயர்ந்து விளங்கும் தோற்றத்தை ஒப்பதாகும்” என்பது இதன்பொருள்.

"பொன்திகழும் மேளிப் புரிசடையம் புண்ணியனும் நின்றுலகம் தாய நெடுமாலும் - என்னும் இருவரங்கத்தால் திரிவரேனும் ஒருவன் ஒருவனங்கத் தென்றும் உளன்”

(இயற்பா, முதற்றிருவந்தாதி 98)

எனப் பொய்கையாழ்வாரும்.