பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ வழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும்

31



“அருச்சுனன் தீர்த்தயாத்திரையாகத் தெற்கே வந்து காவிரியில் நீராடினான், பின்னர்க் கடற்கரை வழியே பல புண்ணியத் தீர்த்தங்களையும் திருக்கோயில்களையும் கண்டு வழிபட்டு மனலூரை யடைந்தான்” என்ற செய்தி வியாசபாரதத்திற் குறிக்கப் பெற்றுளது. பாண்டியன் தன் மகளை மனக்க விரும்பிய அருச்சுனனை நோக்கி ‘'என் முன்னோர் சிவபெருமானை வழிபட்டு அவ்விறைவன் திருவருளால் ஒவ்வொரு பிள்ளையையே பெற்றனர். எனக்கும் ஒரே குழந்தைதான் பிறந்தது. அவளே நீ மணக்க விரும்பும் பெண்” எனக் கூறியதாகப் பாரதம் கூறுகின்றது. வடமொழியிலுள்ள ஆதி காவியமாகிய வான்மீக இராமாயணத்திலும் வியாசபாரதத்திலும் காவிரி முதலிய புண்ணிய தீர்த்தங்களும் திருவெண்காடு முதலிய சிவத்தலங்களும் காலகாலர் முதலிய சிவமூர்த்தங்களும் மக்களால் முறையே வழிபடப்பெற்றமையும், தமிழகத்திற் பலவூர்களிற் சிவபெருமானுக்குத் திருக்கோயில்கள் இருந்தமையும் பாண்டியர் முதலிய தமிழ் வேந்தர்களும் தமிழ்நாட்டு மக்களும் சிவபெருமானைப் பூசனைப் புரிந்து பிள்ளைப் பேறு முதலாகத் தம் உள்ளத்து விரும்பியநற்பேறுகளை யெல்லாம் பெற்று மகிழ்ந்தனர் என்பது நன்கு புலனாதல் காணலாம்.

"சிந்துநதிப் பள்ளத்தாக்கில் அண்மைக் காலத்திற் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் சிவலிங்க வழிபாடு பன்னெடுங்காலத்திற்கு முன் இவ்விந்தியப் பெருநிலத்தில் நடைமுறையில் இருந்திருக்க வேண்டும் என்பதனைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. இதுபற்றி மேனாட்டுப் பேராசிரியர் வெஸ்ட்ரோப் என்பவர் பின்வருமாறு கூறுவர் : -

மனித இனம் வாழ்ந்திருக்கக்கூடிய இப்பேரண்டத்தின் பெரும்பகுதியில் சிவலிங்க வழிபாடு பரவியிருந்திருக்கக்கூடிய அத்தகைய அளவில் பொதுவாகச் சிவலிங்க வழிபாடு நிலவியிருந்திருக்கிறது. ஏனெனில் அது, எகிப்து, சிரியம், பாரசீகம், சிறிய ஆசியா, கிரேக்கம், இத்தாலி ஆகிய இந்நாடுகளில் பல காலங்களாகத் தழைத்தோங்கியிருந்தது. அமெரிக்க நாட்டை முதன் முதலில் ஸ்பெயின் நாட்டவர் கண்டு பிடித்தபோது, அவர்கள்