பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


குரியதாகும்.

இவ்வுலக வாழ்க்கையில் இன்பம் துன்பம் என்னும் இருவினைப்பயன்களும் புணர்வும் பிரிவும் என்னும் நலந்தீங்குகளும் நாள்தோறும் வரும் பகலும் இரவும் போன்று வெவ்வேறியல்பினவாய் மாறிமாறி வருவன. இவ்வியல்பு

'இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்

நண்பக லமையமும் இரவும்போல வேறுவேறியல வாகிமாறெதிர்ந் துளவென வுணர்ந்தனையாயின.” (அகம் 327)

எனவரும் அகநானூற்றுத் தொடரால் இனிது புலனாகும்.

இப்பிறப்பில் நல்லறங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் நிலையில் தீவினைப் பயன் தாக்குதல் இல்லையென்னும் பொதுவுண்மையினை வற்புறுத்தும் நிலையில் அமைந்தது, "இம்மை, நன்றுசெய் மருங்கில் தீதுஇல்” என்னும் தொன்றுபடு பழமொழி ஆகும்.

மக்களாற் செய்யப்பட்ட இருவினைமுதிர்ந்து பயன் கொடுக்கும் திறத்தில் நல்வினைப்பயனாகிய இன்பமும் தீவினைப் பயனாகிய துன்பத்துடன் கலந்துவரும் என்பது,

'நன்றிவிளைவும் தீதொடுவரும்”

என்ற தொடராற் புலப்படுத்தப்பட்டது.

இப்பிறப்பிற் செய்த அறம் மறுபிறப்பில நற்பயன் விளைக்கும் என்பது முன்னோர் கொண்ட நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையின் விளைவாக மறுமைப்பயன்களை எதிர்பார்த்து அறஞ்செய்வோரும் எந்தப்பயனையும் எதிர்பாராது நல்லவையெல்லாம் செய்தற்குரியவை என்ற கடமையுணர்வுடன் அறிஞ்செய்வாரும் என அறஞ் செய்வார் இருதிறப்படுவர். அவருள் மறுமைப்பயனை எதிர்நோக்கி அறஞ்செய்வோர் அறத்தினை விலைக்கு விற்கும் வணிகர் போன்று கருதப்படுவர். பயன்கருதாது