பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


வருகின்றது. இந்தோயிசம் என்னும் சப்பானிய மதத்தில் சிவலிங்கம் முதன்மையானதாக இருந்துள்ளது. அமெரிக்காவில் பேரு கைத் தீவுகளில் சிவலிங்கம் வழிபடப் பெற்றது. இஸ்பானியர் முதன்முதல் அமெரிக்காவுக்குச் சென்றபோது அங்குச் சிவலிங்கங்கள் வைத்து வழிபடப் பெற்றதைக் கண்டனர். ஆப்பிரிக்காவில் தகோமி என்னுமிடத்தில் இலிங்கம் லெங்பா என்ற பெயருடன் வழிபடப்பட்டது.

'பக்கஸ் கெயன்’ என்னும் கடவுள் கெபி என்னுந் தேவியுடன் வழிபடப்பட்டார். பக்கஸ் கடவுளுக்கு இடபமும் புலியும் உரியன. அவர் புலித்தோலையுடுத்துக் கையில் திரிசூலத்தைத் தாங்கியிருந்தார். அவருடன் இடபமும் புலியும் சென்றன. அவருடைய கையில் நீரருந்தும் கமண்டலம் இருந்தது. சின்ன ஆசியாவில் இலிங்கக் கடவுள் கெமோஸ், மெலோச், மெரதொக், ஆதோனியஸ், சிபா, சியஸ் என்னும் பெயர்களுடன் வழிபடப் பெற்றார். இதனால் கெயன் சிவன் எனவும் கெபி கெளரி எனவும் கருதலாம். ஆதோனியர் என்பது அர்த்தநாரீசுவரர் என்பர் வெஸ்ட்ரோப். துர்க்கம்மா எனப் பீடத்தில் எழுதப்பட்ட துர்க்கையின் வடிவம் ஒன்று சில நாட்களுக்கு முன் எகிப்திற் கண்டெடுக்கப்பெற்றது. யூதரது பெத்தெல் என்னும் கல் கடவுளாகக் கருதி வழிபடப் பெற்றது.

மெக்கா நகரின் கோயிலிலுள்ள காபா என்னும் கறுப்புக்கல் சிவலிங்க வடிவில் உள்ளது எனவும், அரேபியர் இதன்கன் பத்தியுடையராயிருத்தமையால் மகமது நபி ^

இதனை அழிக் து விட்டுவிட்டார் எனவும் கருத இடமுண்டு.

புத்த ஆலயங்களிலுள்ள தூபிகளும் தகோபாக்களும் சிவலிங்க வடிவிலேயே அமைந்துள்ளன. நாகரிகம் பெற்றோர் பெறாதார் ஆகிய எல்லா மக்களாலும் பண்டை நாளிற் சிவலிங்க வழிபாடு மேற்கொள்ளப் பெற்றுளது.

சிவபிரான் திருக்கோயில்களின் கருவறையிற்