பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


யில்லாதான் எனக் குறித்தார் திருவள்ளுவர். 'தனக்குவமை யில்லாதான் என்னும் இத்தொடர்ப் பொருளை விளக்கும் முறையில் அமைந்தது,

“பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருட்கும்பேற்றின்

அருமைக்கும் ஒப்பின்மை யான்” (திருவருட் 3)

எனவரும் திருவருட்பயனாகும். மிகப்பெரிய அண்டங்கள் அனைத்தும் தனது பரந்த விரிவுக்குள் அடங்கத்தான் அவை யெல்லாவற்றையும் கடந்து மேலாக விளங்கும் பெருமையி னாலும் மிகமிகச் சிறிய அணுக்கள்தோறும் ஊடுருவி யாண்டும் நீக்கமறக் கலந்து நிற்கும் நுண்மையினாலும், உயிர் தோறும் உயிர்க்குயிராய் நின்று பொருள்களைக் காட்டியும் கண்டும் அருள் சுரக்கும் பெருங்கருனைத் திறத்தாலும் உயிர்களின் முயற்சியாற் சென்றடையமுடியாத திருவாகிய வீடுபேற்றின்பத்தை மன்னுயிர்களின் அறிவெல்லைக்கு அப்பாற்பட்டு நின்று வழங்கும் அருமைத் திறத்தினாலும் தன்னையொப்பார் ஒருவருமில்லாத தம்முதல்வன் இறைவன் என்பது இதன் பொருளாகும். தனக்கு உவமையில்லா தான் (ஒருவாற்றானுந் தனக்கு ஒப்பில்லாதவன்) இறைவன் எனவே அம் முதல்வன் முற்றுணர்வும் அளவிலாற்றலும் பேரருளும் சுதந்திரமும் முதலிய உயர்வறவுயர்ந்த குணங்களையுடையன் என்பதும் பெறப்படும். இவ்வாறு இறைமைக்குணங்களாகிய இலக்கணத்தால் ஒருவாற்றானும் வேற்றுமையில்லாத நிலையில் அவ்வியல்புடைய பரம்பொருள் பலவாக இருத்தல் இயலாது, ஒன்றேயாய் இருப்பது என அறிவுறுத்துவார் அதனை 'ஒன்றலா ஒன்று (சிவஞான போதம் சூ.2 அதிகரணம் 3) என்றார் மெய்கண்டார். ஒன்றலா ஒன்று - ஒப்பற்ற பரம்பொருள்.

தனக்குவமையில்லாத இறைவன் திருவருள் வழி நின்று தற்போதம் நீங்கிய அடியார்கள் கதிரவன் எங்கே தோன்றினாலும் எமக்கு ஆவதென்ன என்று எத்தகைய

மனக்கவலையுமின்றி இனிதிருப்பார்கள் என்பது,

‘எங்கெழிலென் ஞாயிறு எளியோ மல்லோம்.