பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


என்னும்) இருவகையுடம்பினையும் உவர்த்துப் பற்றறவிடுதல், ஈண்டுத் தலைப்படுதல் என்றது இறைவனது திருவருள் ஞானத்தை எய்தப்பெறுதல், இருவகைப்பற்றினையும் விட்டொழித்தவர்க்கே இறைவனது பற்றாகிய திருவருள் ஞானம் கைகூடும் என்னும் தெய்வப்புலவர் வாய்மொழி யினை,

"தனியறிவை முன்னந் தலைப்பட்டார் தீரத்துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றையவரென்று நிலைத்தமிழின் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்த மெய்வைத்த சொல்” (நெஞ்சுவிடுதூது, கண்ணி23-25)

என உமாபதி சிவாசாரியார் தாம் இயற்றிய சித்தாந்த நூல்கள் எட்டினுள் ஒன்றாகிய நெஞ்சு விடு துதில் எடுத்தாண் டுள்ளமை சைவசித்தாந்தத் தத்துவ வுண்மைகளுக்குத் திருக்குறள் நிலைக்களமாக விளங்குதலை நன்கு வற்புறுத்துவதாகும்.

ஒருவர்க்கு இருவகைப் பற்றும் அற்ற பொழுதே அப்பற்றறுதி அவரது பிறப்பையறுக்கும். பற்று அறாத பொழுது அவற்றாற் பிறந்திறந்து வருகின்ற நிலையாமை காணப்படும் என்பார்,

“பற்றற்ற கண்ணே பிறப்புறுக்கும் மற்று

நிலையாமை காணப்படும்” (திருக், 349)

என்றார் திருவள்ளுவர்.

பிறப்புக்குக் காரணமாகிய இருவகைப் பற்றும் நீங்கிய பொழுதே அவற்றின் காரியமாகிய பிறப்பும் அற்றதாம் முறைமைபற்றிப் பற்றற் கண்ணே பிறப்பறுக்கும்’ என்றார். “அற்றது பற்றெனில் உற்றது வீடு' என்பது நம்மாழ்வார் அருளிச்செயல்.

எல்லாப் பொருளையும் பற்றி நின்றே தனக்கென்று ஒருசார்பில்லாதவன் இறைவன். பற்றற்றானாகிய அம்