பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

467


திருநேரிசையில் திருநாவுக்கரசர் குறித்துள்ளமை 57ETಖTb. இதனால் இறைவனைச் சிந்தித்தலாகிய உபாயம் கூறப்பட்டது.

பிறப்பிற்குக் காரணமாகிய பேதைமைகெட வீட்டிற்கு நிமித்த காரணமாகிய செவ்விய முழுமுதற் பொருளைக் கண்டு தெளிவதே ஒருவர்க்கு மெய்யுணர்வாகும் என அறிவுறுத்துவது,

“பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்

செம்பொருள் காண்ப தறிவு” (திருக். 358)

எனவரும் திருக்குறளாகும்.

'பிறப்பென்னும் பேதைமை எனவும் சிறப்பென்னுஞ் செம்பொருள்” எனவும் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். ஐவகைக் குற்றங்களுள் அவிச்சை ஏனைய நான்கிற்குங் காரணமாதலுடைமையின் அச்சிறப்புப் பற்றி அதனையே பிறப்புக்குக் காரணமாக்கிக் கூறினார். எல்லாப் பொருளினுஞ் சிறந்ததாதலால் வீடு சிறப்பெனப்பட்டது. தோற்றக்கேடுகளின்மையின் நித்தமாய், நோன்மையால் தனியென்றுங் கலத்தலின்மையின் துய்தாய்த் தான் எல்லாவற்றையுங்கலந்து நிற்கின்ற முதற்பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல் பற்றி அதனைச் செம்பொருள் என்றார். மேல் மெய்ப்பொருள் எனவும் உள்ளது எனவும் கூறியது உம் இது பற்றியென வுணர்க. அதனை (செம்பொருளை)க் காண்கையாவது உயிர் தன் அவிச்சை கெட்டு அதனோடு ஒற்றுமையுற இடை விடாது பாவித்தல்; இதனைச் சமாதியெனவும் சுக்கிலத் தியானம் எனவும் கூறுவர். உயிர் உடம்பின் நீங்குங்காலத்து அதனால் யாதொன்று பாவிக்கப்பட்டது அஃது அதுவாய்த் தோன்றும் என்பது எல்லா ஆகமங்கட்கும் துணிபாகலின் வீடெய்து வார்க்கு அக்காலத்துப் பிறப்பிற்கேதுவாகிய பாவனை கெடுதற்பொருட்டுக் கேவலப் பொருளையே பாவித்தல் வேண்டுதலால் அதனை முன்னே பயிறலாகிய இதனின் மிக்க உபாயம் இல்லையென்பது அறிக. இதனாற் பாவனை கூறப்பட்டது என இத்திருக்குறளுக்குப்