பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


களைந்து உலக வாழ்க்கையில் சிறிதும் தோய்வின்றிச் செம்பொருளாய சிவத்துடன் கூடி நின்று தன் செயலறச் சிவமே தாமாகத் திகழும் திருவருள் நலம் வாய்க்கப்பெற்ற சீவன் முத்தர்களை,

‘சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள் உலகிற்

சருவசங்க நிவிர்த்தி வந்த தபோதனர்கள் இவர்கள் பாக்கியத்தைப் பகள்வது என்இம்மையிலே உயிரின் பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவரன்றோ"

எனப் போற்றுவர் அருணந்தி சிவாசாரியார். பராவுதல் சஞ்சரித்தல் மக்கள் வடிவினை மேற்கொண்டு உலகிற் சஞ்சரிக்கும் சிவ பரம் பொருள்களாகத் திகழ்பவர் என்னும் கருத்தில் சிவஞானிகளுக்கு வழங்கும் பெயர் பராவுசிவர், நடமாடுங்கோயில் நம்பர் என்பனவாகும்.

இம்மை மறுமை வீடு என்னும் மும்மைப் பயன் களையும் ஒருங்கே பயக்கும் பொருளும் இன்பமும் கூறத்தொடங்கி அவற்றிற்குக் காரணமாகிய ஊழின் வலிமையினை 'ஊழ் என்னும் அதிகாரத்திற் கூறியுள்ளார். ஊழைப்பற்றித் திருவள்ளுவர் கூறியுள்ளவற்றைத் தொகுத்து நோக்குவோமாயின் சைவசித்தாந்தக் கொள்கையின் வேர்கள் இவ்வதிகாரத்திற் கால்கொண்டுள்ளமை இனிது புலனாகும்.

உயிர்கள் செய்த நன்றுந்தீதுமாகிய இருவினைப் பயன்கள் அவ்வினை செய்த உயிர்களையே சென்றடையு மாறு அமைந்த முறைமையே ஊழ் எனப்படும். பால்முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஊழினைக்குறித்து வழங்கும் மறுபெயர்களாகும். அறத்தொடு நெருங்கிய தொடர்புடையதாய்ப் பொருள் இன்பங்கட்கு ஏதுவாதலின் அறத்துப்பாலின் இறுதிக்கண் ஊழைப் பற்றிய அதிகாரம் வைக்கப்பட்டது.

உலக வாழ்க்கையில் ஒருசாரார் இடைவிடாமுயற்சி யுடையவராகவும் மற்றொரு சாரார் சோம்பர்களாகவும் இருக்கக் காண்கிறோம். முயற்சி ஆக்கத்திற்கும் சோம்பல் (மடி) அழிவிற்கும் காரணம் என்பது யாவரும் அறிந்த