பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


வஞ்சனையாற்கூடி அம்முனிவரால் வெகுண்டு சபிக்கப்பட்டு உடல் முழுவதும் அருவருக்கத்தக்க ஆயிரம் புண்களை யுடையனாய்ப் பின்னர் அம்முனிவர் தம் அருளால் அப்புண்கள் தாமரைமலர் போலும் அழகிய கண்களைப் பெற்று ஆயிரங்கண்ணோன் ஆனான் என்பது இராமாயணத்தில் வரும் ஒரு கதை. இக்கதையை எடுத்துக்காட்டாகக் கொண்டமைந்தது,

'ஐந்தவித்தா னாற்றல் அகல்வiசும்பு எார்கோமான்

இந்திரனே சாலுங்களி' (திருக். 25)

எனவரும் திருக்குறளாகும். நீத்தார் பெருமையுணர்த்தும் இக்குறள் ஐம்புலன்களிற் செல்லும் அவாவையடக்காமல் அவற்றையடக்கிய கோதம முனிவனது சாபமும் அருளும் பெற்று நிறைமொழிமாந்தருள் ஒருவனாகிய அம்முனிவனது ஆற்றலை உலகம் உணரச் செய்தவன் வானோர் வேந்தனாகிய இந்திரனாதலின் அவனே ஐந்தவித்த நீத்தாரது ஆற்றிற்குச் சான்றாயினான் என்பார் இந்திரனே சாலுங்கரி என்றார். கரி - சான்று சாட்சி.

ஒத்த காதலர் இருவருள்ளத்தே காமவுணர்வினைத் தோற்றுவிக்கும் காமன் (199) என்னுந் தெய்வத்தையும், வினைவயத்தாலாய உடம்பில் வாழும் உயிரினை வினை நுகர்ச்சி முடிந்த காலம் பார்த்து உடம்பினின்றும் பிரிக்கும் கூற்றம் (269, 765, 894, 1085) என்னும் தெய்வ ஆற்றலையும் திருவள்ளுவர் திருக்குறளிற் குறிப்பிட்டுள்ளார்.

இதுகாறும் எடுத்துக்காட்டியவற்றால் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் தம்காலத்தில் நிலவிய தெய்வங் கொள்கையினையும் தமிழ் முன்னோர் தமது வாழ்க்கையில் பெற்ற முதிர்ந்த அறிவின் திறத்தால் உண்டென நம்பிய புத்தேளிர் வாழும் உலகு, இருள் சேர்ந்த இன்னாவுலகம், வானோர்க்கு உயர்ந்தவுலகம், தாமரைக்கண்ணான் உலகு ஆகியவற்றையும் பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து அல்லற் படும் மாந்தர்கள் மீண்டும் பிறவாநிலையாகிய வீடுபேற்றினை யடைதற்குச் சாதனமான தவமும் ஞானமும் ஆகிய மெய்ந் நெறி முறைகளையும் அந்நெறியினால் மக்கள் அடைதற்குரிய