பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் தெய்வ வழிபாடுகளும் சிவநெறிக் கோட்பாடுகளும்

மக்கள் வாழும் நிலத்தியல்புக்கு ஏற்ப அவர்தம் மனத்தியல்பாகிய தெய்வங்கொள்கையும் வழிபாட்டு முறைகளும் தோன்றி நிலைபெறுவனவாதலின் தெய்வங் கொள்கையினைத் திணைக் கருப்பொருள்களுள் ஒன்றாக அடக்குவர் பண்டைத்தமிழாசிரியர். முல்லை நிலத்தில் திருமால் வழிபாடும், குறிஞ்சி நிலத்தில் முருகன் வழிபாடும், மருத நிலத்தில் வேந்தன் (இந்திரன்) வழிபாடும், நெய்தல் நிலத்தில் கடற்றெய்வமாகிய வருணன் வழிபாடும் தோன்றி நிலைபெற்றன. இவ்வாறு நான்கு நிலத்தவர்களும் தாங்கள் வாழும் சூழ்நிலைக்கேற்பத் தம் உள்ளத்து வகுத்து அமைத்துக் கொண்டனவே திணைக்கருப்பொருளாகிய இத்தெய்வ வழிபாடுகளாம். இத்தெய்வவழிபாடுகள் உருப்பெறுதற்குத் துணையாய் முன்னின்றவை ஞாயிறு, திங்கள், மழை, நிலம் என்னும் ஐம்பூதங்களின் சார்புடைய இயற்கைப் பொருள்களாம். வாழ்க்கைக்கு நேர்முறையிற் பயன்படும் இவ்வியற்கைப் பொருள் வணக்கமே மக்கட் சமுதாயத்தில் முதன்முதலில் தோன்றித் தினைக் கருப்பொருளாகிய தெய்வ வழிபாட்டின் தோற்றத்திற்குத் துணைசெய்திருத்தல் வேண்டும். இவ்வியற்கைப்பொருள் வணக்கம் எக்காலத்தும் மாறாது நிலை பெறுவதாகும்.

"திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதுங்

கொங்கலர்தார்ச் சென்னிகுளிர்வெண் குடைபோன்றிவ் அங்கண் உலகளித்த லான்’ “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு மேரு வலந்திரித லான்’ ‘மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

நாமநீர் வேலியுலகிற் கவனளிபோல்