பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


கண்கள் என்னுள்ளத்தைக் கவற்றுதலாலே அப்பெருமானது இருவகைக் கோலங்களையும் காணுதற் பொருட்டு வந்தேன்?” என மாங்காட்டு மறையோன் கோவலனுக்குக் கூறும் பகுதி :

“நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப் பால்விரிந் தகலாது படிந்தது போல ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற் பாயற் பள்ளிப் பலர்தொழுதேத்த விரிதிரைக் காவிரி வியன்பெருந்துருத்தித் திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும், வீங்குநீ ரருவி வேங்கட மென்னும் ஓங்குயர் மலையத்துச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி இருமருங்கோங்கிய இடைநிலைத் தானத்து மின்னுக்கொடியுடுத்து விளங்குவிற் பூண்டு நன்னிற மேகம் நின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையி னேந்தி நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் என்கண் காட்டென்றென்னுளங்கவற்ற வந்தேன் குடமலை மாங்காட்டுள்ளேன்”

(காடுகாண் காதை 35 -53)

என்பதாகும். மதுரைக்கு வழி கூறும் அம்மறையோன், மதுரைக்குச் செல்லும் வழி கொடும்பாளுர் நெடுங்குளத்தின் பக்கத்திலே மூன்று கிளையாய்ப் பிரிகிறதென்றும், அது பிறைமுடிக்கண்ணிப் பெரியோனாகிய சிவபெருமான் ஏந்திய முத்தலைச் சூலத்தையொத்ததென்றும் அவற்றின், இடப்பக்கத்தே யமைந்த வழியே சென்றால் திருமால் குன்றத்தை அடையலாமென்றும், அக்குன்றத்தின் கண் பிலத்துவழி உண்டென்றும், அப்பிலத்துக்குள்ளே புண்ணிய சரவணம், பவகாரணி, இட்ட சித்தியென்னும் மூன்று பொய்கைகள் உளவென்றும், அவற்றுள் புண்ணிய