பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


துன்பத்தைக் கெடுக்கும்’ என்று திருமால் குன்றத்தின் வழியியல்பினையும் ஏனையிரண்டு வழிகளின் இயல்பினையும் சொல்லி முடித்து, நீனிலம் கடந்த நெடுமுடியண்ணல் தாள் தொழுதகையேன் யானும் போகுவல். கண்கூடாகக் காணத்தகும் பிலத்தின் இயல்பு இதுவாகும் என மறையோன் வழி சொல்லி முடிக்கின்றான். இம்மறையோன் கூறியவற்றைக் கோவலனுக்கு வழித் துணையாக வந்த சமணத் துறவியாகிய கவுந்தியடிகள் கேட்டு "நலம்புரி கொள்கை நான்மறையாள இந்திரவியாகரணத்தை எம்முடைய அருககுமாரன் அருளிச் செய்த பரமாகமங்களிற் காண்கின்றிலையோ? அதன் பொருட்டுப் புண்ணிய சரவணத்தில் முழுக வேண்டிய தில்லை. முற்பிறப்பிற் செய்தவற்றை இப்பிறப்பின் நிகழ்ச்சியாற் காணுதல் உண்டு. எய்தாத பொருள் எதுவு மில்லை யாதலின் இட்ட சித்தி எய்துதல் வேண்டா. அதனால் நீ கூறிய பிலத்தில் புகவேண்டிய இன்றியமையாமை எங்களுக்கு இல்லை. நீ காமுற்று வந்த தெய்வத்தைக் கண்டு வழிபடுதற்கு நீ போவாயாக. யாங்களும் எங்களுக்குப் பொருத்தமான வழியிற் போகிறோம்” என்று அம் மறையோனை நோக்கிக் கூறுகின்றார். இவ்வாறு கவுந்தியடிகள் கூறிய மொழி சமண சமயத்தவர்களின் சமயப்பற்றினையும் வைதிக நெறியில் அவர்களுக்கிருந்த வெறுப்பினையும் நன்கு புலப்படுவதாக அமைந்துள்ளமை கானலாம். -

கோவலன் கவுந்தியடிகளின் துணைகொண்டு கண்ணகியை அழைத்துக்கொண்டு மதுரைக்குச் செல்லும் வழியில் அவனைத் தேடிக் கொனர் தற்பொருட்டு மாதவியால் அனுப்பப்பட்ட கோசிகன் என்னும் மறையவன், இடைவழியில் கோவலனைக் கண்டு மாதவி கொடுத்த ஒலையைக் கொடுத்து, அவனது பிரிவால் காவிரிப்பூம் பட்டினத்திலுள்ளார் வருந்தும் துயர்நிலைக்கு இராமபிரான் பிரிவால் அயோத்தி நகர மக்கள் அடைந்த துயர் நிலையை உவமையாக எடுத்துரைக்கின்றான். மதுரைநகரப் புறஞ்சேரியில் தங்கிய கோவலன் கவுந்தியடிகளை நோக்கி யான் மாதவியால் வைத்த பெரு வேட்கையால் பொருள் முழுவதையும் இழந்து மனைவியுடன் வேற்று நாடடைந்து