பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மண்டிலம்’ என அடிகள் ஞாயிற்றைப் புகழ்தலால் ஞாயிறு வணக்கம் அவர் காலத்தில் எல்லாச் சமயத்தவராலும் மேற்கொள்ளப் பெற்றமை விளங்கும். அடிகளே, ஞாயிறு போற்றுதும் என இறைஞ்சுதலும் கண்ணகியார் காய்கதிர் செல்வனே கள்வனோ என் கணவன் என அத்தெய்வத்தை வினவ, அது 'ஒள்ளெரி யுண்ணுமிவ் வூர் என மறுமொழி கூறியதும், புகார் நகரத்தே கதிரவனுக்குரிய கோயிலாகிய பகல் வாயில் உச்சிக் கிழான் கோட்டம் அமைந்திருந் தமையும் தமிழ்நாட்டில் அடிகள் காலத்து ஞாயிறு வழிபாடு நிலைபெற்ற செய்தியைப் புலப்படுத்துவனவாகும்.

திங்கள் : "திங்களைப் போற்றுதும்’ எனக் காப்பியத்தைத் தொடங்கும் பொழுதே திங்களைத் தெய்வமாகக் கொண்டு அடிகள் போற்றுதலாலும், நிலாக்கோட்டம் என்ற பெயரால் சந்திரனுக்குரிய கோயில் புகார் நகரத் துண்மையை அடிகள் விளக்குதலாலும், பெரியோனாகிய இன்றவன் இமையவர் ஏத்த அழகொடு முடித்த அருமை யுடையது பிறையெனக் குறித்தலாலும், மகளிர் பிறைதொழுதலாகிய வழக்கம் உள்ளமையானும் திங்கள் வணக்கம் தமிழ்நாட்டில் பண்டுதொட்டு நிலவியிருந்தமை யுணரப்படும்.

தீ வழிபாடு

மதுரை நகரத்தே கண்ணகியாரது ஏவலால் மாலையெரியங்கி வானவனாகிய தீக்கடவுள் தோன்றி, அந் நகரத்தில் வாழ்ந்த நல்லோரை விடுத்துத் தியோரைச் சுட்ட திறத்தினை அடிகள் விளக்குவதாலும், சோழ நாட்டில் புகாரிலுள்ள கோயில்களில் நான்முகன் கூறிய வேத நெறிப்படி ஒமங்கள் நடந்தன என்றும், மங்கல மறையோர் வாழும் ஊர்களில் அரசனது வெற்றியுடனே மழைக்குக் கருப்பத்தைத் தோற்றுவிக்கும் அழலை வளர்க்கின்ற வேள்விச் சாலையிலுண்டான மறைய்ோரால் உண்டாக்கப் பட்ட தேவருணாவின் ஆவி, மலைகளை மூடிய மேகத்தைப் போன்று மாடங்களை மூடி நிற்கும் என்றும் நாட்டுவளங் கூறுதலாலும், மாடலமறையோன் செங்குட்டுவனை நோக்கி