பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


பிடாரி என்னும் எல்லைத்தெய்வம் வழிபடப் பெற்று வருகின்றமை இங்கு நினைத்தற்குரியதாகும்.

கோசல நாட்டு வேந்தனாகிய தயரதனும் அயோத்தி நகர மக்களும் அல்லலுற்று வருந்தத் திருமாலின் அவதாரமாகிய இராமபிரான் தம்பி இலக்குவனொடும் காடடைந்ததும், சீதையைப் பிரிந்து வருந்தியதும், இராவணனது இலங்கையை அழித்ததும் ஆகிய இராமாயணக் கதையையும் கண்ணன் பாண்டவர் பொருட்டுத் துரியோதனன்டால் தூது சென்றது, கதிரவனை அழியால் மறைத்தது முதலிய பாரதக் கதையினையும், நளன் சூதாடி ஆட்சியையிழந்து மனைவியைப் பிரிந்து துன்புற்ற கதையினையும் இளங்கோவடிகள் தாம் இயற்றிய காப்பித்தியத்திற் குறிப்பிடுதலால் வடமொழியிலுள்ள புராண இதிக்ாச்ங்கள் இளங்கோவடிகள் காலத்தில் தமிழகத்திற் பரவி எல்லோராலும் பயிலப் பெற்றமை நன்கு தெளியப்படும்.

காவிரிப்பூம்பட்டினத்தில் சோமகுண்டம் சூரிய குண்டம் என்ற தீர்த்தங்களும், திருமாலிருஞ்சோலையாகிய அழகர்மலையில், புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்னும் பெயருடைய பொய்கைகளும் சிறந்த பயனளிப்பனவாகக் கூறப்படுதலாலும், பாவந்திரக் குமரியாடுதலும் கங்கையாடுதலும் ஆகிய செய்தி குறிப்பிடப் படுதலாலும், அக்காலத்தில் தீர்த்த யாத்திரையும், தெய்வ வழிபாடு கருதிய தலயாத்திரையும் சமய வொழுகலாற்றின் கூறுகளாக மக்களால் மேற்கொள்ளப்பெற்றன என்பது நன்கு புலனாகும்.

சமண சமயத்தினை மேற்கொண்ட கோவலன் தன் மகள் மணிமேகலைக்குப் பெயரிடும் நாளில் தானம்வாங்க வந்து தெருவே மதயானையால் வருத்தமுற்ற அந்தணனை யானையின் பிணிப்பினின்றும் மீட்டுக் காப்பாற்றிப் பொருள் அளித்தமையும் அறியாமையால் கீரிப்பிள்ளையைக் கொன்ற பார்ப்பனியின் பாவத்திற்குக் கழுவாய் செய்யப் பொருள் அளித்தமையும், செங்குட்டுவன் என்னும் வேந்தன் மாடல மறையோனுக்குத் தன் நிறையளவாகிய பொன்னினைத்