பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு



மணிமேகலையிற் காணப்படும் தெய்வ வழிபாடுகளும் சிவநெறிக் கொள்கையும்

முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்துடன் வரலாற்று நிகழ்ச்சியாலும், காப்பியத் தலைவர்களின் உறவாலும் இடவகையாலும் காலத்தாலும் மிக நெருங்கிய தொடர்புடையது, மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை யென்னும் செந்தமிழ்க் காப்பியமாகும். சோழநாட்டின் கடற் றுறைப்பட்டினமாகிய புகார் நகரத்தில் மாசாத்துவான் என்னும் வணிகனுடைய மைந்தன் கோவலன் என்பானுக்கு, ஆடல் பாடல் அழகு என்னுந்திறத்தாற் சிறந்த நாடகக் கணிகைபாற் பிறந்த மகள் மணிமேகலை. இவள் தன் தந்தை கோவலன் மதுரையிற் கொலையுண்டிறந்த துயரச் செய்தி கேட்டு வருந்தித் தன்தாய் மாதவியுடன் புத்த சமயத்தைச் சார்ந்து இளம் பருவத்திலேயே துறவு பூண்ட வரலாற்றை விரித்துரைப்பது சாத்தனார் இயற்றிய செந்தமிழ்க் காப்பியமாதலின் இது ‘மணிமேகலை துறவு’ என்னும் பெயருடையதாயிற்று.

மணிமேகலை துறவு என்னும் இப்பொருட்டொடர் நிலைச்செய்யுள் பரந்த மொழியால் அடிநிமிர்ந்தொழுகிய தோல் என்னும் வனப்பினையுடையது, முப்பது அகவற் பாக்களால் இயன்றது, ஒவ்வோர் அகவலும் னகரமெய் வீற்றால் முடிதலின் இயைபு எனப்படும் வனப்புக்கு இக் காப்பியம் இலக்கியமாக அமைந்துள்ளது. கோவலன் மகள் மணிமேகலையைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு அவளது வரலாற்றின் வழிப் புத்தசமய நல்லறங்களையும் ஒழுகலாறுகளையும் புத்த சமயத் தத்துவங்களையும் விரித்து விளக்கும் புத்த சமயக் காப்பியமாகவே சாத்தனார் இதனை இயற்றியுள்ளார். இக் காப்பிய நிகழ்ச்சிகளிற் பெரும்பாலன தமிழகத்திற் சோணாட்டின் தலைநகராகிய காவிரிப்பூம் பட்டினத்திலும் சேரர்க்குரிய வஞ்சி நகரத்திலும் சோழர்க்