பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


முருகப்பெருமான் கிரவுஞ்சம் என்னும் மலையுருக் கொண்டு உலகிற்கு இடர்விளைத்த அவுணனைத் தனது வேற்படையால் இருகூறாகப் பிளந்து கொன்றான் என்ற புரானச்செய்தி,

"குருகுபெயர்க் குன்றங்கொன்றோன் அன்னதின்

முருகச் செவ்வி” (மணிமேகலை 13-14)

எனவரும் தொடரிற் குறிக்கப்பட்டது.

திருமால்

கடலின் வண்ணமாகிய கரிய திருமேனியையுடைய தெய்வம் திருமால் என்பதனைக் கடல்வண்ணன் (மணி. எ 98) என்ற பெயராற் குறித்தார் சாத்தனார்,

“பொன்னணிநேமி வலங்கொள் சக்கரக்கை

மன்னுயிர் முதல்வன்” (unaws. s 57-58)

என மணிமேகலை திருமாலைக் குறிப்பிடுகின்றது. பொன்னால் இயன்ற வட்டத்தினையுடைய சக்கரப் படையை வலப்பக்கத்தில் ஏந்தி மன்னுயிர்கட்கு இறைவனாகத் திகழ்வோன் திருமால் என்பது இத்தொடரின் பொருளாகும்.

திருமால் மாவலி என்னும் அவுணர்வேந்தன்பால் குறள்வடிவுகொண்டு மூவடிமண் வேண்டிப்பெற்று நெடியோனாய் நிமிர்ந்து மூவுலகையும் ஈரடியால் அளந்து கொண்ட புராணச்செய்தி,

"நெடியோன் குறளுருவாகிநிமிர்ந்துதன்

அடியிற்படியை அடக்கிய அந்நாள்” (மணி. 19. 52-52)

எனவரும் தொடரில் விரித்துரைக்கப்பெற்றது. திருமால் அவதாரமாகிய கண்ணபிரானும் பலதேவரும் நப்பின்னையும் ஆகிய மூவரும் துவராபதியில் எருமன்றத்தே குரவைக் கூத்தாடிய திறத்தை,