பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியனார் கூறும்

வழிபாட்டு நெறிகளும் தத்துவக் கொள்கைகளும்

உலக மக்களால் மதிக்கத்தகும் பொருள்கள் எல்லாவற்றையும் முதற்பொருள், கருப்பொருள், உரிப் பொருள் என மூவகைப் பொருள்களாகப் பண்டைத் தமிழாசிரியர்கள் பகுத்து ஆராய்ந்தனர். அவற்றுள் முதற் பொருள் என்றது மன்னுயிர்களின் வாழ்க்கைக்கு நிலைக் களமாகவுள்ள நிலமும் காலமும் ஆகிய இருதிறப் பொருள்களையும், கருப்பொருள் என்றது நிலமும் காலமுமாகிய அம்முதற்பொருள்களையிடமாகக் கொண்டு அவற்றின் சார்பிற் கருக்கொண்டு தோன்றும் புல் முதல் மக்கள் ஈறாகவுள்ள உயிர்ப் பொருள்களையும் உயிரல் பொருள்களையும். உயிர்ப் பொருளும் உயிரல் பொருளும் ஆகிய யாவும் நிலமும் காலமுமாகிய முதற்பொருளை நிலைக் களமாகப் பெற்றுக் கருக்கொண்டு தோன்றுவனவாதலின் கருப்பொருள் எனப்பட்டன. இவ்வுலகில் மெய்வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம்பொறியறிவுடன் மனவுணர்வு எனப்படும் ஆறாவதறிவினையும் பெற்றுள்ள உயர்தினை மக்களுக்குரிய அகமும் புறமுமாகிய ஒழுகலாறுகளே உரிப்பொருள் என வழங்கப்படும். மக்கட் குலத்தார் வாழும் நிலத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப அவர்தம் உள்ளத்துணர்வு களும் செயல்முறைகளும் ஒரொழுங்குபெற அமைதல் இயல்பு. இந்நுட்பத்தினை ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்திற்கு முற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள் நன்குனர்ந்து வெளியிட்டுள்ளார்கள் என்பதினை மேற்கூறிய முதல்கரு உரி என்னும் மூவகைப் பொருட்டாகுபாட்டால் உய்த்துணர்ந்து கொள்ளலாம். மாந்தர் வாழும் நிலத்தியல்புக்கேற்ப அவர்தம் மனத்தியல்பாகிய தெய்வக் கொள்கையும் வழிபாட்டு நெறிகளும் அவற்றின் வழிப்பட்ட தத்துவக் கொள்கைகளுந்