பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

550

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


இல்லோனும் அன்னோன் இறைவன்’ என்ற தொடரால் முடித்துக் கூறப்பட்டது. இறைவனைச் சார்பு’ என்ற சொல்லால் திருவள்ளுவர் குறித்துள்ளமையும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

இறைவனும் உயிர்களும் பொன்னும் அதனாலாய அணிகலன்களும் போல அபேதம் என்பர் ஏகான்மவாதிகள். ஒளியும் இருளும் போலப் பேதம் என்பர் மாத்துவர். சொல்லும் பொருளும் போலப் பேதாபேதம் என்பர் பாஞ்சராத்திரிகள். இறைவன் உயிர்களோடு பேதம் அபேதம் பேதாபேதம் என்னும்,மூன்றுமாய் அத்துவிதமாய்க் கலந்து நிற்பன் என்பர் சைவசித்தாந்திகள். அபேதம் - ஒன்றாதல் பேதம் வேறாதல் பேதாபேதம் - ஒருவகையால் ஒன்றாகியும் மற்றொரு வகையால் வேறாகியும் நிற்றல். என்றும் உள்ள உயிர்கட்கு நிலைபேறாகிய சார்பும் அறிதலும் செய்தலும் என்னும் இம்மூன்றும் இன்றியமையாதன. இறைவன் உயிரும் உடம்பும்போல உயிர்களோடு ஒன்றாய் நிற்றலால் நிலைபேறாகிய சார்பும், கண்ணும் கதிரவனும் போல வேறாய்நின்று பொருள்களைக் காட்டுதலால் அறிதலும், கண்னொளியும் உயிரறிவும் போல உடனாய் நின்று காட்டிக்காணுதலால் செயலும் நிகழும் என்பர் அறிஞர். இவ்வாறு ஒன்றாதல், வேறாதல், உடனாதல் என்னும் முத்திறங்களும் ஒருங்கமைந்த அத்துவித சம்பந்தமே (இருமையின் ஒருமையே) இறைவனுக்கும் உயிர்களுக்கும் இடையேயுள்ள நீங்காத்தொடர்பு என்பது தம்காலத்தில் வாழ்ந்த சைவவாதியின் கருத்தாதலை மணிமேகலையாசிரியர் மேற்குறித்த சைவவாதியின் கூற்றில் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளமை காணலாம்.

“எட்டுவகையும் உயிரும் யாக்கையுமாய்க் கட்டி நிற்போன்’ என்ற தொடரால் அபேதமும் படைத்து விளையாடும் பண்பினோன்’, ‘துடைத்துத் துயர் தீர் தோற்றத்தோன்’ என்ற தொடர்களாற் பேதமும், 'தன்னில்வேறு தானொன்றில்லோன்’ என்ற தொடராற் பேதாபேதமும் ஆக இம்மூவகையும் விரவிய அத்துவித நிலையில் இறைவன் உயிர்களோடு தொடர்புடையனாகத்