பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


உலகுயிர்கள் எல்லாவற்றினும் நீக்கமறக்கூடி அவை பலவுமாய் விரவியிருப்பினும் அவற்றின் தன்மை தனக்கெய்த லின்றித் தான் அவற்றின் வேறாய் நிற்பன் என்னும் மெய்ம்மையினையே தான் ஒருவனுமே பலவாகி நின்றவா? எனவரும் இத்தொடரில் திருவாதவூரடிகள் விளக்கி யருள்கின்றார். ‘ஒருவன்’ எனவே ஒருவன் என்னும் ஒருவனாகிய இறைவனும், “பல” எனவே அவனல்லாத அவன் அவள் அதுவெனப்படும் உலகுயிர்களும், ஆகி’ எனவே அவற்றொடு பிரிவின்றி (அத்துவிதமாய்)க் கலந்து விளங்கும் அம்முதல்வனது தன்மையும் புலப்படுத்தப் பெற்றுள்ளமை கானலாம்.

இதுகாறும் எடுத்துக்காட்டிய குறிப்புக்களால் மணிமேகலையிற் சைவவாதியின் கூற்றாக அமைந்த இறைவனது இலக்கணமும் திருவாசகம் முதலிய திருமுறைகளிற் கூறப்படும் இறைவனிலக்கணமும் ஒத்தமைந்துள்ளமையும் சைவசித்தாந்த நூல்களால் விரித்துல்ரக்கப்பெறும் அத்துவித இலக்கணத்திற்குரிய அடிப்படைக் கொள்கைகள் மணிமேகலை கூறும் சைவவாதியின் கூற்றில் இடம் பெற்றுள்ளமையும் இனிது புலனாதல் காணலாம்.

மணிமேகலை சமயக்கனக்கர் தம் திறம் கேட்ட காதையில் வேதவாதியின் வேறாகச் சைவவாதியும் வைணவ வாதியும் பிரமவாதியும் பிரித்துக் கூறப்பட்டுள்ளனர். சைவசமயத்தின் உட்பகுதிகளாகிய பாசுபதம் காபாலிகம் மாவிரதம் முதலிய சமயங்கள் மணிமேகலையிற் கூறப்பட வில்லை. அவை வடநாட்டிற் சிவனை வழிபடும் கூட்டத்தினரிடையே காணப்படும் பல்வேறு நோன்பு களையும் கோலங்களையும் குறிப்பனவன்றித் தமக்கெனச் சிறப்புரிமையுடைய தத்துவக் கொள்கையின் வழியமைக்கப் பெற்ற சமயங்களன்மையின் அவற்றை மணிமேகலையாசிரியர் இங்குக் குறிப்பிடவில்லையென எண்ணவேண்டியுள்ளது.

சுதமதியென்பாள் மணிமேகலையை அழைத்துக் கொண்டு மலர்கொய்தற்கென மலர்வனம் நோக்கிச் செல்லும்பொழுது புகார் நகர வீதியிலே பித்தனொருவன்