பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


கிடைக்காமையால் சிவயோகியார் திருமூலராதற்கு முன்னுள்ள அவர்தம் ஊர் குலம் பேர் முதலிய வரலாற்றுக் செய்திகளைக் குறித்துச் சேக்கிழாரடிகள் எதுவும் கூறாது விட்டார்.

திருமூலராகிய சிவயோகியார் திருக்கயிலையில் நந்தியெம் பெருமான்பால் ஞானநூற்பொருள்களை ஒதியுணர்ந்த நான்மறை யோகிகளுள் ஒருவர் என்பது,

&

'நந்தியருள் பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோகமாமுனி மன்றுதொழுத பதஞ்சலி வியாக்கிரர் என்றிவர் என்னோ டெண்மரு மாமே” (திருமந். 87)

எனவரும் அவர் தம் வாய்மொழியால் அறியப்படும். சிவயோகியாராகிய இவர் அட்டமா சித்திகளும் கைவரப் பெற்றவர் என்பது,

"அரியதெனக்கில்லை அட்டமாசித்தி

பெரிதருள் செய்து பிறப்புறுத்தானே” (திருமந்: 841)

என அவர்கூறுதலாற் புலனாகும்.

மூலன் இறந்தமையால் பசுக்கள் உற்றதுயரத்தை நீக்குதற் பொருட்டு இறைவனருளால் மூலனது உடம்பிற் புகுந்து பசுக்களைச் சாத்தனூரிற் சேர்த்து விட்டு மீண்டு வந்து தமது பழையவுடம்பினை மற்ைத்து வைத்தவிடத்திற் பார்த்தபோது அவ்வுடம்பு இறைவனருளாற் கானாது போகவே அவ்வுடம்பினாற் பயனில்லை யென்றுணர்ந்து, இறைவன் திருவருட்குறிப்பின் வண்ணம் மூலனுடம்பிலேயே தங்கிச் சிவயோக நிலையில் நெடுங்காலம் இருந்தார் என்பது,

'நந்தியருளாலேநாதனாம்பேர்பெற்றோம் நந்தியருளாலே மூலனை நாடினோம் நந்திஅருளா அது என் செய்யும் நாட்டினில் நந்திவழிகாட்ட நானிருந்தேனே' (திருமந்:68)

எனத் தம்மைப் பற்றிக் கூறுதலால் அறியப்படும். இதன்கன்