பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

575


10 பாடல்கள், புவனாபதிச் சக்கரம் 12 பாடல்கள், நவாக்கரி சக்கரம் 100 பாடல்கள் ஆக 303 பாடல்களே இங்குக் குறிக்கப்பட்ட முந்நூறு மந்திரம் எனவும், முதல் தந்திரத்தில் உபதேசம் என்ற தலைப்பிலுள்ள முப்பது பாடல்களே முப்பதுபதேசம் எனவும் வெளியிடப் பெற்றுள்ளமை இக்கருத்தினை வலியுறுத்தல் காணலாம்.

தமிழ் மொழியில் முதல்நூலாக அருளிச்செய்யப் பெற்றது திருமந்திரமாலை என்பது தொன்றுதொட்டு வழங்கிவரும் வரலாற்றுண்மையாகும். திருமூலராகிய சிவயோகியார் தாம் கயிலையிலிருந்து வரும்பொழுதே ‘மந்திரமாலிகா என்றொரு வடமொழி நூலைக் கொண்டு வந்து தமிழில் மொழிபெயர்த்தாரென்றும், உபமன்யு பத்தவிலாசத்திற் கூறப்படும் அவரது வரலாற்றை நோக்கின் இதன் முதனூல் வடமொழியில் உள்ளதென்பது போதரும் என்றும் அறிஞர் ஒருவர் எழுதியுள்ளார். உடமன்யுபத்த விலாசம் என்பது சேக்கிழார் இயற்றியருளிய பெரிய புராணத்தை அடியொற்றி வடமொழியில் அமைந்த மொழி பெயர்ப்பு நூலென்பது, காய்தலுவத்தலகற்றி ஆராயவல்ல நல்லறிஞர் பலர் க்கும் ஒப்ப முடிந்த உண்மையாகும். வடமொழியில் அமைந்த அந்நூலில் திருமந்திரமாலை என்னும் இந்நூலின் பெயர், ‘பூரீமந்த்ர மாலிகா எனக் குறிக்கப்பட்டிருத்தலை ஆதாரமாகக் கொண்டு திருமூலரால் முதனூலாக அருளிச்செய்யப்பெற்ற திருமந்திரத்தை வடநூலொன்றின் மொழிபெயர்ப்பாகத் துணிந்து கூறுதல் நடுநிலையில் நின்று உண்மை காணும் ஆராய்ச்சியாளர்க்கு அடாத செயலாம். ஆரியமும் தமிழும் வல்ல சிவயோகியா ராகிய திருமூலர் இறைவன் திருவருளால் தியானநிலையி லிருந்து அருளிய திருமந்திரம் வடநூலின் ம்ொழிபெயர்ப் பாக இருக்குமானால் இந்நூல் அருளிச் செய்த வரலாற்றை விரித்துரைக்கும் இந்நூற்பாயிரப் பகுதியில் இச்செய்தியைத் தெளிவாகக் குறித்திருப்பர். அவ்வாசிரியருடைய வாய் மொழிகளை அகச்சான்றுகளாகக் கொண்டு அவரது வரலாற்றினை விரித்துரைத்த சேக்கிழார் நாயனாரும் இக்குறிப்பினைத் திருத்தொண்டர் புராணத்தில் தெளிவாக விளக்கிக் கூறியிருப்பர். ‘சிந்தை செய்து ஆகமஞ்