பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

579


“உள்ளுணர் வானஞான முதலிய ஒருநான்குண்மை

தெள்ளுதீந்தமிழாற் கூறுந்திருமூலர்”

எனவும்,

“நலஞ்சிறந்த ஞானயோகக் கிரியா சரியையெலாம்

மலர்ந்தமொழித் திருமூலர்”

எனவும் இந்நூலாசிரியரைக் குறித்தும்,

“ஞானமுதல் நான்குமலர் நற்றிருமந்திர மாலை”

என இந்நூலைக் குறித்தும் சேக்கிழாரடிகள் சிறப்பித்துப் போற்றுதலால் இனிது விளங்கும். ஞானமுதல் நான்குமலர் நற்றிருமந்திரமாலை’ என்றமையால் சைவ சமயத்தின் ஞானநன்னெறியினை விளக்கும் முறையில் ஞானத்திற் சரியை, ஞானத்திற் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் ஆகிய நால்வகை நன்னெறிகளையும் திருமூலதேவர் இத்திருமந்திரப் பனுவலில் அருளிச் செய்துள்ளார் என்பது நன்கு விளங்கும்.

திருமூலர் தாம் கூறும் மந்திரப் பொருளை மக்கள் எல்லோரும் விரும்பிக் கேட்பதிலும், கேட்டு அவ்வழியில் ஒழுகிப் பயன்பெறுவதிலும் மனவெழுச்சியும் உ றுதிப்பாடும் உடையராதற்பொருட்டுத் தாம் இந்நூல் வாயிலாக உணர்த்த எடுத்துக்கொண்ட சிவாகமப் பொருள்களின் சிறப்பும், சிவாகமம் தமக்குக் கிடைத்த வழிமுறையும், தாம் கேட்டுணர்ந்த ஆகமப் பொருளைத் திருமந்திரமாலையாகத் தமிழிற் சொல்ல நேர்ந்த காரணமும் என இந்நூலைப் பயில்வோர் இன்றியமையாது முதற்கண் அறிந்து கொள்ளுதற்குரிய செய்திகளை அறிவுறுத்தும் முறையில் அமைந்தது திருமந்திரத்தின் முதற்கண் அமைந்த பாயிரப் பகுதியாகும்.

வேதம் பொதுநூல், ஆகமம் சிறப்புநூல் என்பது முன்னர் உணர்த்தப்பெற்றது. இங்கு வேதம் எனப்படுவன வேதசிரம் எனவும் வேதாந்தம் எனவும் போற்றப்பெறும் ஞானபாதங்களாகிய உபநிடதங்களையென்பர் புெரியோர்.