பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

583


சேர்த்துப் படைக்கப்பெறும் நிலை கருவுற்பத்தி’ என்ற தலைப்பில் பேசப்படுகிறது. உயிர்கள் ஒருமலமுடையன, இருமல முடையன, மும்மலமுடையன என்னும், பாகுபாட்டினால் முறையே விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என மூவகைப்படும் என்றும், அவற்றுள் வீடுபேற்றில் விருப்ப முடைய சகலவர்க்கத்தார் நூற்பொருளைக் கேட்டற்குரியர் என்றும், அறிவுறுத்தும் நிலையில் அமைந்தது 'மூவகைச் சீவவர்க்கம்’ என்ற பகுதியாகும்.

சகல வர்க்கத்தாராகிய மக்கட் குலத்தார், இவ்வுலகில் நன்னெறியறிந்து ஒழுகிப் பிறவாநெறியாகிய வீடுபேற்றின்பத் தை அடைதற்கு உரியராதலின் தம்மால் வேண்டும் பொருளளித்து வழிபட்டு நற்பொருளைக் கேட்டுணர்தற் குரிய மெய்யுணர்வுடைய பெரியோர்களை அறிந்து வழிபட்டும் மனமாசகற்றும் தீர்த்தத்தின் இயல்பு தெரிந்தும் தம்மைத் தூய்மை செய்துகொள்ளுதல் வேண்டும் என்பதும், மன்னுயிர்கள் உய்தற்பொருட்டு இறைவன் அன்பர்க்கு எளிவந்து அருள்புரியும் அருள் நிலையங்களாகிய திருக்கோயிலின் பண்பு தெரிந்தும், அங்கு நிலையாக எழுந்தருளி யிருந்து உயிர்களின் இடரகற்றி இன்பமளிக்கும் இறைவனது அதோமுகத்து (கீழ்நோக்கிய முகத்தின்) இயல்பு கண்டும், அம்முதல்வனை வழிபட்டுச் சிவநிந்தை, குருநிந்தை, மாகேஸ்வரநிந்தை ஆகிய தீமைகளினின்றும் நீங்கி பொறை யென்னும் அணிகலனைப் பூண்டு, பெரியோரை அறிந்து, அவர்களைத் துணையாகக் கொண்டு, நன்னெறியில் ஒழுகி உய்தி பெறுதல் வேண்டுமென்றும் ஆசிரியர் இத்தந்திரத்தில் அறிவுறுத்தி உள்ளார்.

மூன்றாந்தந்திரம் அட்டாங்க யோகம் முதல் சந்திரயோகம் ஈறாக இருபத்தொரு தலைப்புக்களை யுடையது. இதன்கண் எண்வகை யோக உறுப்புக்களாகிய இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பனவும், இவற்றை மேற் கொண்டோர் அடையும் பேறுகளும் கூறப்பெற்றுள்ளன.

உயிர்களைக் கொல்லாதவனும், பொய்கூறாதவனும்,