பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/594

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

585


பயிற்சியின் பயன் குருவின் அருள்வழியே பெறத்தக்கது என்பதனை,

"ஆரியன் நல்லன் குதிரை இரண்டுள

வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை கூரியநாதன் குருவின் அருள்பெற்றால் வாரிப்பிடிக்க வசப்படுந் தானே.”

எணவருந் திருமந்திரத்தில் ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார்.

(இ-ள்) குதிரைச் சேவகன் நல்லவன். குதிரைகளும் இரண்டுள்ளன. அவனைக் கொண்டு அக்குதிரைகளைத் தத்தம் புலங்களிற் செல்லுமாறு செலுத்தி இழுத்துப் பிடிக்கும் உபாயம் அறிபவர்கள் இல்லை. மெய்யுணர்வு மிக்க ஞானத்தலைவனாகிய குருவின் திருவருளைப் பெற்றால் சேர்த்துப் பிடிக்க (அக்குதிரைகள்) வசப்படும். எ[[]].

ஆரியன் - குதிரைச் சேவகன், என்றது மனத்தினை. குதிரை இரண்டாவன இடகலை, பிங்கலை என்னும் இருநாடிகளில் செல்லும் வளிகள். வீசிப்பிடித்தல் - நெடுந்துரம் செல்லுமாறு விட்டு இழுத்தல். விரகு - உபாயம், கூரிய - மெய்யுணர்வு மிக்க. வாரிப்பிடித்தல் - (இடகலை, பிங்கலை என்னும் இருவகை வளியையும்) சேர்த்துப் பிடித்தல். வசப்படுத்தல் - சுழுமுனை வழிச் சென்று கும்பித்தல்.

பிரத்தியாகாரமாவது மனத்தை ஐம்புலப் பொருள் களில் புறத்தே போகவிடாது அகமுகமாகத் திருப்பும் பயிற்சி. இது தொகைநிலையெனவும் கூறப்படும். மூக்குக்குக் கீழே பன்னிரண்டு அங்குல எல்லையிலுள்ள அநாகத்தானத்திலே சாதகனாகிய நீ உள்ளத்தை ஒருமை நிலையில் வைத்துப் பரம்பொருளைத் தியானித்தலையும் செய்ய வல்லாயாயின் பெருமை வாய்ந்த சித்தியும், பெருமை பொருந்திய (இராச) யோகமும் வந்து நின்னைப் பொருந்தும். உன்னுடைய உடம்புக்கு எக்காலத்தும் அழிவில்லை (திருமந்திரம் 581) என்பர் திருமூலர்.