பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

587


பொற்பினை நாடிப்புணர்மதியோடுற்றுத் தற்பரமாகத் தகுந்தண் சமாதியே’

என்பர் திருமூலர். (இ-ள்) பொருள்தோறும் உலகத்தார் கற்பித்து வழங்குகின்ற கற்பனைகளை யொழிந்து மூலாக்கினிவழியே மேற்சென்று (உலகினைச் சிருட்டித்த) சிற்பனும் பேரொளியாய்த் திகழும் அழகனும் ஆகிய இறைவனைத் தேடிப் புணர்ந்த சந்திரமண்டலத்தோடு பொருந்தித் தனக்கு மேலான பரம்பொருளே தான் ஆகும் நிலையில் தற்போதமிழந்து ஒன்றியுடனாகும் தகுதிவாய்ந்ததே உள்ளத்தைக் குளிர்விக்கும் தன்மையினதாகிய சமாதி (திருமந்திரம் 628).

கற்பனை - உலகத்தார் பொருள்தோறும் புனைந்து வழங்கும் பெயர், வடிவு முதலிய வேற்றுமைகள். கனல்மூலாக்கினி. சிற்பன் - உலகினைப் படைத்த சிற்பி. என்றது உலகியற்றியானாகிய இறைவனை. புணர்மதி - மூலாக்கினி யின் வெம்மை சென்று சார்தற்கு இடனாகிய சந்திர மண்டலம். தற்பரம் - தனக்குப்பரம் என்றது, ஆன்மாவாகிய தனக்கு மேலான பொருள் என்றவாறு. தண்மை - குளிர்ச்சி. 'சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என்னுள்ளங் குளிரும்மே” எனவும் உளங்குளிர் தமிழ்மாலை எனவும் வரும் திருமுறைத் தொடர்கள், பிறவித் துயராகிய வெப்பத்துக்குக் குளிர்ந்த நிழலாய் வெளிப்பட்டு விளங்குவது இறைவன் திருவருள் நினைவாகிய சிவஞானம் என்னும் மெய்ம்மையை வற்புறுத்துவனவாகும்.

எண்வகை யோக உறுப்பினையடுத்து அணிமா, லகிமா, மகிமா, பிராத்தி கரிமா, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய எண்வகைச் சித்திகளின் இயல்பும் பயன்களும் கூறப்பெற்றுள்ளன.

அணிமா தம் உடம்பினை அணுவினும் மிக நுண்மையதாக்கிக் கொள்ளும் வன்மை மகிமா மலையினும் மிக்க பெருமையுடைய வடிவினைக் கொள்ளுந்திறன். கரிமா. இலேசான பஞ்சினையும் அளவிடமுடியாத கன முடையதாகச் செய்யும் ஆற்றல். இலகிமா - எத்துணைக்