பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

593


மகரம் உதரம் வளர்தோள் சிகரம்

பகருமுகம் வா.முடியப் பார்” (உண்மை விளக்கம் 32)

எனவரும் பாடலிலும்,

“ஒலிக்கின்ற உடுக்கை ஏந்திய திருக்கையிலே சிகாரமும் நன்றாக வீசிய திருக்கையிலே வகாரமும், அமைத்த திருக்கையிலே யகாரமும், அக்கினியேந்திய கையிலே நகாரமும், முயலகனை மிதித்துள்ள பாதத்திலே மகாரமும் கொண்டருளி நிருத்தஞ் செய்தருளுந்திறத்தினை,

“சேர்க்குந் துடிசிகரம், சிக்கெனவா வீசுகரம்,

ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கிலிறைக்கு அங்கி நகரம், அடிக்கீழ் முயலகனார் தங்கு மகரமது தான்” (உண்மைவிளக்கம் 33)

எனவரும் பாடலிலும், திருவாசி ஓங்காரமாகவும், அதன்கண் உள்ள சுடர்கள் ஓங்காரத்தை விட்டு நீங்காத திருவைந் தெழுத்தாகவும் அமைய அழகிய திருவம்பலத்தில் இறைவன் செய்தருளும் நிருத்தத்தை யான் எனது என்னும் செருக்கற்றுக் கண்டவர்கள் பிறப்பிறப்பற்ற பேரின்பமுத்தி யினைப் பெறுவார்கள் என்பதனை,

ஓங்கார மேநற்றிருவாசி உற்றதனில் நீங்காவெழுத்தே நிறைசுடராய் - ஆங்காரம் அற்றார் அறிவரணி அம்பலத்தான் ஆடலிது பெற்றார் பிறப்பற்றார் பின்” (உண்மைவி.

எனவரும் பாடலிலும் திருவதிகை மனவாசகங்கடந்த விரித்துக் கூறியுள்ளமை இங்கு மனங்கொளத்தகுவதாகும்.

எவ்வகைப் பொருள்களுக்கும் பரந்து இடங் கொடுக்கும் ஆதாரமாகவும் இடந்தொறும் பரவியுள்ள பொருள்களாகவும் சிவமும் சத்தியும் இரண்டறக் கலந்து விளங்குந்திறத்தினை உணர்த்துவது,

'வாயும் மனமுங் கடந்த மனோன்மணி

பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை

கை. இ. கா. a, :