பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


குறித்த பெயர் என்பதும் இப்பெயர் மன்னனைக் குறித்து வழங்கப்பெறுதல் உபசார வழக்கேயென்பதும் இவ்வாறு மன்னனைக் கடவுளாக மதித்துப் போற்றும் வழக்கம் தொல்காப்பியனார் காலத்திலேயே நிலைபெற்று வழங்கிய தொன்மையுடையதென்பதும் இவ்வழக்கம் திருவள்ளுவர் காலத்திலும் தொடர்ந்து நிலைபெற்றிருந்ததென்பதும் நன்கு துணியப்படும்.

மக்களால் செய்யப்படும் உழவுக்கும் பிற தொழில் கட்கும் காவல் செய்யுங் கருத்தினால் நாளடைவில் உருவாகி நிலைபெற்ற குடும்பமே மன்னர் குடும்பமாகும். மன்னன் என்னும் சொல், நிலைபெறுதல் என்னும் பொருளுடைய “மன்' என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த காரணப் பெயராகும். இந்நுட்பம் மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை எனவரும் திருக்குறளால் இனிது புலனாகும். மக்களது நல்வாழ்வு நிலை பெற அவர்கள் வாழும் நாட்டை நிலைபெறக் காக்குங் கடமை பூண்ட ஆட்சித் தலைவன், மன்னன் என நன்கு மதிக்கப்பெற்றான். அதனால் அவனது குடும்பமும் நாட்டில் வழிவழியாக நிலைபெற்று வருவதாயிற்று. “மக்கட் குலத்தாரது உடம்பை வளர்ப்பனவாகிய நெல் முதலிய உணவுப் பொருள்களோ அவை விளைதற்கு உறுதுனையாகிய நீரோ இவ்வுலகில் உயிர்வாழ்வினை நிலைபெறச் செய்யும் ஆற்றலுடையன அல்ல; மக்களை ஒரு நெறிப்படுத்தித் தம்முள் வேற்றுமை யின்றி அன்பினாற் கலந்து வாழ வழி வகுக்கும் ஆட்சித் திறனுடைய மன்னனே மலர்தலை யுலகிற்கு உயிராவான்” எனத் தமிழ் முன்னோர் எண்ணினார்கள். அவர்கள் எண்ணிய வண்ணமே அக்காலத் தமிழ் வேந்தர்களும் தம் நாட்டு மக்களின் இன்னுயிர் போன்று நாட்டிற்கு இன்றியமையாதவராய் முறை பிறழாது ஆட்சி புரிந்தார்கள். இங்ங்ண்ம் அரசியல் நாகரிகம் உருப்பெறுதற் கிடனாகிய மருதநிலத்தில் வாழ்ந்த மக்கள் பசியும் பிணியும் பகையும் தோன்றாதவாறு தமது நாட்டினைப் பேணிக் காக்கும் கடமையினை மேற்கொண்ட மன்னனையே தெய்வம் என மதித்துப் போற்றினார்கள். அவர்கள் போற்றுதற்குரிய வகையில் அக்காலத் தமிழ் வேந்தர்களும் தாம் குடிமக்களின்