பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

635


(உயிர்களின் உள்ளத்தும் ஆக) எங்கும் கலந்து நின்ற இறைவனைக் காணும் கண்ணுக்குக் காட்டும் கதிர்போன்று உயிரின் அகத்தும் நுகரும் பொருள்களிடத்தும் ஒப்பத்தங்கிக் கண்காணிக்குந் தலைவனாகக் கண்டுனர்ந்தவர்கள், முன்னம் அவனைத் தாம் காணாமையால் மறைவிற் செய்த தீய செயல்களை விட்டொழியும் நல்லுணர்வினராவர்” என்பது இதனால் அறிவுறுத்தப்பட்ட பொருளாகும்.

கண்காணி - தம்கீழுள்ளோர் செய்யும் தொழில்களின் நன்மை தீமைகளை உடனிருந்து மேற்பார்த்து அவர்களது குற்றங்களைந்து நெறிப்படுத்தும் அதிகாரி. கள்ளம் பிறர் அறியாதபடி வஞ்சனையால் மறைவிற்செய்யும் செயல். காணுதல் - அறிவினாற்கூர்ந்து நோக்குதல். கண்காணி - கண்ணுள் (உயிரறிவில்) உடனின்று கானுபவன். மனத் தகத்தான் ......காளத்தியான் அவன் என்கண்ணுளானே' எனவும், 'நானேதும் அறியாமே என்னுள்நின்று நல்லனவும் தியனவும் காட்டாநின்றாய்” எனவும்

"கள்ளனேன் கள்ளத்தொண்டாய்க்காலத்தைக் கழித்துப்போக்கித்

தெள்ளியே னாகினின்று தேடினேன் நாடிக்கண்டேன் உள்குவா ருள்கிற்றெல்லாம் உடனிருந்தறிதியென்று வெள்கினேன் வெள்கிநானும் விலாவிறச் சிரித்திட்டேனே'(4)

எனவும் வரும் அப்பர் அருளிச் செயல்கள், இறைவன் உயிர்கள் செய்யும் செயல்களை உள்ளும் புறம்பும் நின்று மேற்பார்த்து நெறிப்படுத்தும் கண்காணியாய் எவ்விடத்தும் நீக்கமறக் கலந்து நிற்றலையும் அவ்வுண்மையினையுணர்ந்தார், அதுகாறும் அறியாமையால் தாம்மறைவிற் செய்த தவறுகளுக்கு நாணிவருந்தி அத்தீச்செயலை அறவே விட்டு நீங்குவர் என்பதனையும் அறிவுடைமாந்தர் தம் கூடா வொழுக்கத்தை விட்டு நீங்குதற்குரிய உபாயம் இதுவே என்பதனையும் இத்திருமந்திரம் நன்கு புலப்படுத்தல் அறியத்தகுவதாகும்.

ஏழாந்தந்திரத்தில் இதோபதேசம் என்றதலைப்பில் அமைந்துள்ள திருமந்திரப் பாடல்கள் யாவும் மக்கள் இம்மை மறுமைப் பயன்களை எய்துதற்குரிய உயர்ந்த கோட்பாடு