பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

637


பலரிடத் துஞ்சென்று நற்பொருளை வினவிப்பெறுதல் உலகியல்பு. அவ்வாறு எங்கும் அமைந்து திரிந்து அடைதற்குரிய நற்கதி நுமக்குப்புறம்பாக எதுவுமில்லை; நும்மனத்தகத்திலேயே நிலைபெற்றுள்ளது. ஆதலின் இறைவனை மனத்தின்கண் மறவாது நினைத்தலொன்றே போதுமானது என்பார், சென்றே புகுங்கதிஇல்லை என்றும், 'தும்சித்தத்து நின்றே நிலைபெற நீர் நினைந்துய்மினே’ என்றும் கூறினார். சென்றே புகுங்கதி இல்லை எனவே நீர் அக்கதியை நாடிச் செல்லவேண்டிய இன்றியமையாமை யில்லை, சென்றடையாத திருவாகிய அச்சிவகதி நும்முள்ளத் திருந்து வெளிப்பட்டுத் தோன்றி நும்மை அகத்திட்டுக் கொள்ளும் என அறிவுறுத்தினாராயிற்று,

உயிர்கட்குச் சார்பாயுள்ள சிவபெருமானை அன்பால் நினைவார் எய்தும் பயனும் நினையாதார்.அடையும் தீமையும் உணர்த்துவது,

"சார்ந்தவர்க்கின்பங்கொடுக்குந் தழல்வண்ணன்

பேர்ந்தவர்க் கின்னாப்பிறவி கொடுத்திடும் கூர்ந்தவர்க் கங்கே குரைகழல் காட்டிடும் சேர்ந்தவர் தேவரைச் சென்றுனர் வாரே” (2114)

எனவரும் திருமந்திரமாகும்.

“தீவண்ணனாகிய சிவபெருமான் தன்னை அன்பினாற் சார்ந்து ஒழுகுவார்க்கு இன்பத்தை நல்கி யருள்வான். தன் திருவருள் ஆணையின் வழிச்சாராது விலகி நடப்பார்க்குத் துன்பமே விளைக்கும் பிறவியைக் கொடுப்பான். தன் பால் அன்பு மீது ரப் பெற்றார்க்கு ஒலிக்கின்ற கழலணிந்த திருவடியைக் காட்டி அருள் புரிவான். அவனது திருவடியாகிய சிவஞானம் சேரப் பெற்றவர்கள் இறைவனை அணுகிச் சென்றுணர்ந்து இன்புறுவோராவர்” என்பது இதன் பொருள்.

சார்தல் - இருவகைப் பற்றும் நீங்க இறைவனை அடைக்கலமெனச் சார்ந்து தன் செயலற்று இறைவனது அருள்வழி யொழுகுதல்; அவனருளாலன்றித் தானாக ஒன்றையுஞ் செய்யாமை. தீயானது தன்னை மதித்து அகலாது