பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/666

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

658

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மாணவனை நோக்கி அறிவுறுத்திய ‘தத்துவமசி என்னும் மகாவாக்கியம் மாணவனது உள்ளத்திற்பொருந்தி அதுநான் ஆனேன் என்னும் பொருளில் சிவோகம் பாவனையாக அமைய அதனால் தற்போதம் கெட, சீர்த்திமிக்க நந்தியாகிய குருவின் பெருங்கருனை ஆன்மாவைச் செம்பொருளாகிய சிவத்தோடு இரண்டறக் கலக்கும்படி ஒன்றுவிக்கும். (குருவின் திருவருளால்) சிவமாகிய அவ்வுயிரானது எல்லையற்ற பேரின்பநிலையை எய்தி இன்புறுவதாகும்” என்பது இதன் பொருளாகும்.

நீ அது ஆனாய் என்பது தத்துவமசி மகா வாக்கியம். தத் - அது. துவம் - நீ. அசி - ஆனாய். மகாவாக்கியம் - பேருரை. தத்துவமசி என்பது ஆசிரியன் மாணவனை நோக்கி அறிவுறுத்தும் நிலையிலமைந்த மகாவாக்கியமாகும். இதன்பொருளை மாணவன் சிந்திக்கும் முறையில் அமைந்தது, அது நான் ஆனேன்’ என்பதாகும். சமைந்து அறுதலாவது, உள்ளத்திற் பொருந்தித் தான்’ என்னும் தற்போதம் கெடுதல், சேய சிவம் - செம்மையேயாய சிவபரம்பொருள், சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாத நிலையில் து:ராதி தூரமாக அப்பாற்பட்டுள்ள சிவ பரம்பொருள் எனினும் அமையும். நனியானே சேயானே’ எனப் போற்றுவர் நாவுக்கரசர். சீர்நந்தி பேரருள் சேய சிவமாக்கும் என இயையும். ஆயது - அவ்வாறு சிவத்தோடு ஒன்றாகிய ஆன்மா. ஆனந்த ஆனந்தி - எல்லையற்ற பேரானந்தத்தையுடையது.

“கண்டஇவையல்லேன் நான்என் றகன்று கானாக்

கழிபரமும் நானல்லேன் எனக்கருதிக் கசிந்த தொண்டினொடும் உளத்தவன்றான் நின்றகலப்பாலே

சோகமெனப்பாவிக்கத் தோன்றுவன்வே றின்றி விண்டகலு மலங்களெலாம் கருடதியா னத்தால்

விடமொழியும் அதுபோல விமலதையும் அடையும் பண்டைமறை களும்அதுநான் ஆனேன் என்று

பாவிக்கச் சொல்லுவதிப்பாவகத்தைக் கானே” (293)

எனவரும் சிவஞான சித்தியார் இத்திருமந்திரத்தினை யடியொற்றி வேதத்திற் கூறப்பட்ட மகாவாக்கியத்தின்