பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/681

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

673


எனவரும் திருமந்திரமாகும்.

எப்பொருட்குஞ் செழுமைநல்கும் சார்பாந் தன்மையையுடைய சிவபெருமானை அவனருளாற் கண்டுணரப் பெற்றேன். ஆதலால் பிறவிப் பிணியினை விட்டொழிந்தேன். உலகவுறவாகிய பாசப்பிணிப்பினை விட்டு விலகினேன் (எனது பசுபோதங் கழன்றமையால்) கடவுளும் நானும் எனப் பிரித்துணரவொண்ணாதபடி இறைவனோடு இரண்டறக் கலந்து ஒன்றானேன். ஆதலால் அங்கு அழியுந்தன்மையவாய் வரும் எத்தகைய செல்வங் களையுமே இனி வேண்டும் குறையுடையே னல்லேன் என்பது இதன்பொருள்.

செழுஞ்சார்புடைய சிவனைக் கண்டேன் (ஆதலாலே) பிறவி ஒழிந்தேன், உறவு என்னும் பாசம் கழிந்தேன். கடவுளும் நானும் ஒன்றானேன், ஆங்கு அழிந்து வரும் ஆக்கமும் இனி வேண்டேன் என இயையும், எல்லாப் பொருட்கும் பற்றுக் கோடாகிய இறைவனது சார்பு உலகத்துப் பிற சார்பு போலன்றி எக்காலத்தும் ஊக்கமும் ஆக்கமும் நல்கும் செழுமை வாய்ந்தது என்பார் செழுஞ் சார்புடைய சிவன்’ என்றார். நான் என்றது உடம்புளிருக்கும் பொழுதே அரன்கழலனையும் பேறுபெற்ற ஆன்மாவை, கடவுளும் ஆன்மாவும் ஒன்றாதலாவது, உப்பானது தனது கடினத்தன்மை நீங்கி நீரோடு ஒன்றாய்க் கலத்தல் போல உயிர் தனது சகசமலமாகிய ஆணவமலங் கெட்டொழியக் கடவுளோடு இரண்டறக் கலந்து ஒன்றாதால். ஆங்கு என்றது, சீவன் முத்தர்க்கு அயலதாய் வேறுபட்ட உலகினை, அயரா அன்பின் அரன்கழலணைந்த திருமூல தேவநாயனார் தமது அருளனுபவத்தில் வைத்து அனைந்தோர் தன்மையினை விளக்குவதாக அமைந்தது இத்திருமந்திரப் பாடலாகும்.

திருமூலநாயனார் அருளிச் செய்த இத்திருமந்திர மாலையில் தெய்வப்புலவர் அருளிய திருக்குறளிலுள்ள கருத்துக்களும் சொற்றொடர்களும் பொன்னே போற் பொதிந்து வைக்கப்பெற்றுள்ளமை பன்னிரு திருமுறை வரலாறு இரண்டாம் பகுதியில் திருமந்திரமும் திருக்குறளும்

சை. சி. சா. வ. 43