பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/685

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

677


துணியாகும். இக்கருத்து,

44.

குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவமென்பது குறித்தோரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே யுரையுனர் வற்றதோர் கோவே (1581)

எனவரும் திருமந்திரத்தில் இடம் பெற்றுள்ளமை காணலாம். இவ்வுண்மையினை,

“அகளமாயாரும் அறிவுரிதப்பொருள்

சகளமாய் வந்ததென் றுந்தீபற தானாகத் தந்ததென்றுந்தீபற” (திருவுந்தியார் 1)

எனவரும் பாடலில் திருவியலூர் உய்ய வந்த தேவநாயனார் விளக்கியுள்ளார். "தோற்றமில் காலமாகத் தூய்மைப் பொருளாய் எத்தகையோராலும் இன்னதன்மைத்தென அறியவொன்னாததாய் உள்ள சிவமாகிய முழுமுதற் பொருள் நம் பொருட்டுத் திருமேனி கொண்டு குருவாக எழுந்தருளியது என்று உந்தி பறப்பாயாக அறிதற்கரிய அம்முதற்பொருள் தானே வலியவந்து மெய்யுணர்வை வழங்கியருளியது என்று உந்தி பறப்பாயாக’ என்பது இதன் பொருள். இதனை விரித்து விளக்கும் முறையில் அமைந்தது,

“அகளமயமாய் நின்ற அம்பலத்தெங்கூத்தன் சகளமயம் போலுலகில் தங்கி - திகளமாம் ஆணவ மூல மலமகல ஆண்டான்காண் மாணவ என்னுடனாய் வந்து” (4)

எனவரும் திருக்களிற்றுப்படியார் பாடலாகும். அகளம் - அருவம், என்றது, உயிர்க்குயிராய் நின்று அறிவிக்கும் பேரறிவினை. சகளம் - உருவம், என்றது, குருவாகி வந்து அறிவிக்கின்ற திருமேனியை, திருவுந்தியார் திருக்களிற்றுப் படியார் ஆகிய இவ்விரு நூல்களும் திருமூல நாயனார் அருளிய திருமந்திரத்திற் கூறப்படும் சிவாதுபவ வுண்மை களை விரித்துரைக்கும் அநுபூதி நூல்களாகும்.

திருவருள் ஞானம் பெற்ற நல்லுயிர்கள் தன்முனைப்பு