பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/696

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

688

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தன்மையைப் பெறுவன் என்பதாம். ஆதிபெளதிகம், ஆதி தைவிகம், ஆதியான்மிகம் எனக் கருடன் மூவகைப்படும். உலகத்திற் காணப்படும் கருடன் ஆதிபெளதிக கருடன். அதற்கு அதி தெய்வமாய் மாந்திரிகன் உள்ளத்தில் அதுபோல் வைத்துத் தியானிக்கப்படும் மந்திரவுருவாகிய கருடன் ஆதிதைவிக கருடன். அம்மந்திர உருவமே தானாகத் தன்னறிவு அதன் வயத்ததாம்படி உறைத்து நிற்குமாறு ஒன்றித் தியானிக்கும் பாவனை கருட பாவனை எனப்படும் அம்மந்திரம் இடமாக நின்று மாந்திரிகனுக்குப் பயன் கொடுப்பதாகிய சிவசத்தி ஆதியான்மிக கருடன் எனப்படும். சுட்டியறியப்பட்ட பிரபஞ்சத்தை, 'இது மெய்ப்பொரு ளன்று, இது மெய்ப்பொருளன்று’ என இவ்வாறு ஒவ்வொன்றாக வைத்து நோக்கி இது மெய்ப்பொருளன்று எனக் கழித்து நீக்கி, அவ்வாறு கண்டு நீங்கிய ஆன்மாவாகிய தன்னறிவின் கண்னே சுட்டுணர்வின்றி நின்ற கடவுளை யாராய்ந்து, அது நானானேன்’ என்று ஒருவன் பாவிப்பானாயின், அப்பாவனையால் வேறன்றியுடனாய் விளங்கித் தோன்றும் முதல்வனது அருளால், தொன்மையே கூடிநின்ற தனது பொதுவியல்பைத் தான் விட்டு நீங்க வல்லனாவன். இவ்வாறு உயிர் தன்னுடன் வேறன்றித் தோன்றும் முதல்வனது அருளால், தான் பாசப்பிணிப்பி னின்றும் நீங்குதல், ஒள்ளிய கருட தியானத்தில் விளங்கித் தோன்றும் கருடனால் தியானிப்போனாகிய பாவகன் பாம்பின் விடத்தைத் தீர்த்துக் கொள்ளுமாறு போலாம்” என விளக்குவது,

“கண்டத்தையன்றன் றெனவிட்டுக் கண்டசத்தாய்

அண்டனை ஆன்மாவில் ஆய்ந்துணரப்- பண்டணைந்த ஊனத்தைத் தான்விடுமாறுத்தமனின் ஒண்கருட சானத்தில் தீர்விடம்போல்தான்”

(சிவஞானபோதம் சூ. அதி. 2)

என வரும் சிவஞானபோத உதாரண வெண்பாவாகும். சானம்- தியானம், வடமொழிச் சிதைவு. இவ்வெண்பா மேற்குறித்த திருமூலர் வாய்மொழியை அடியொற்றி யமைந்ததாகும்.