பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/698

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

690

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


பெற்றுள்ளமை காணலாம்.

நெல்லுக்குத் தவிடும் உமியும் அநாதியாயிருந்தும் ஒருகாலத்திலே நீங்குந் தன்மைபோல, உயிர்களுக்கு மலம்மாயை கன்மம் என்னும் மும்மலங்களும் தொன்மையே யுள்ளன என்றும், அவை தத்தம் காரியத்தைச் செய்தல் முதல்வனது ஆணையால் என்றும், வீடுபெற்ற உயிர்களிடத்தில் அவை இல்லாதொழியினும் பாசப் பிணிப்புடைய உயிர்களிடத்திலே அம்மலங்கள் நீங்காது நிற்றலால் அவற்றின் உண்மைத் தன்மைக்கு அழிவில்லை யென்றும் அறிவுறுத்துவது,

“நெல்லிற் குமியும் நிகழ்செம் பினிற்களிம்பும் சொல்லிற் புதிதன்று தொன்மையே - வல்லி மலகன்மம் அன்றுளவாம் வள்ளலாற் பொன்வாள் அலர்சோகஞ் செய்கமலத் தாம்”

(சிவஞானபோதம் சூத் 2 அதி. 2)

என வரும் வெண்பாவாகும். “நெல்லின்கண் உமியும், செம்பின்கண் களிம்பும் எக்காலத்து உளவாயின என்று ஆராய்ந்து சொல்லுங்கால் அந்நெல்லும் செம்பும் உளவாயின. அன்றே அவையுள்ளனவன்றி இடையேவந்தன அல்ல எனல் வேண்டும். அதுபோல மாயை, ஆணவம், கன்மம் என்னும் மும்மலங்களும் அநாதியேயுள்ளனவாம். முன்னேயுளதாகிய தாமரைப்பூ மலர்தலும் குவிதலும் கதிரவனாற் செய்யப்படுமாறு போல அவை தத்தங் காரியங்களைச் செய்தல் இறைவனது முன்னிலையினானே யாகும்” என்பது இதன் பொருளாகும். மாயை இறைவனுக்கு வைப்புச் சத்தியாதலால் வல்லி என்றார். மலம் - ஆணவம். சகசமலமாகிய ஆணவத்தின் இயல்பினை விளக்குவார் நிகழ் செம்பினிற் களிம்பு’ என்றார். ஆணவமலமானது செம்பின் வெட்டுவாய் தோறும் கலந்துள்ள களிம்பினைப் போன்று அநாதியே உயிருடன் விரவி அதன் அறிவைத் தடைசெய்து நிற்றலின் அக 'களிம்பு’ என்ற பெயராலும் வழங்கப்படும்.

'களிம்பறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி (114) என வரும் திருமந்திரம் இப்பெயர் வழக்கத்தினை நன்கு