பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/700

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

692

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


எனவரும் சிவப்பிரகாசச் செய்யுளாகும்.

ஆன்மா மலம் நசித்து இறைவனைச் சேர்ந்து இரண்டற்று ஒன்றும் முறையினை உணர்த்துவது,

"அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால் உப்பெனப்பேர்பெற்றுருச் செய்த அவ்வுரு அப்பினிற் கூடிய தொன்றாகுமாறு போற் செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே” (136)

எனவரும் திருமந்திரமாகும். “கடலிடத்தேயுள்ள) நீரின் மிகுந்த உவர்ப்பானது, கதிரவனது வெப்பத்தால் உப்பு எனப் பேர்பெற்று உருக்கொண்ட அது, மீண்டும் நீரிற்கலந்தபோது நீரேயாகுமாறு போல, முடிவாகச் சொல்லுமிடத்து ஆன்மா சிவத்துள் அடங்கும்” என்பது இதன்பொருள்.

அப்பு - நீர். கூர்மை - கடல் நீரிலுள் கரிப்புத்தன்மை,. நீரிடத்தே பொருந்தியுள்ள கரிப்புத் தன்மை கதிரவன் வெப்பத்தால் வேறு பிரிக்கப்பட்டு உப்பு என உருக்கொண்ட அது மீண்டும் தண்ணிருடன் கூடியவழி அதனுடன் பிரிவின்றி அடங்குமாறு போலப் பாசத்தாற் பிணிக்கப் பட்டுள்ள கட்டு நிலையில் இறைவனது விரிவினில் பொதுவாக அடங்கிக்கிடந்த ஆன்மா, பாசப்பிணிப்பற்று வீட்டுநிலையில் சிறப்புநிலையிற் சிவத்துள் அடங்கி யொன்றாகும் என்பது இதன்பொருள்.

‘அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால் உப்பெனப் பேர்பெற்று உருச் செய்த அவ்வுரு என்பது, இறைவனருளால் உயிர் கருவி கரணங்களைப் பெற்று உப்புடன் கூடிய நிலையையும், அவ்வுரு அப்பினிற் கூடிய தொன்றாதல்’ என்பது மும்மலப் பிணிப்பின் நீங்கிய முத்தி நிலையையும் குறித்தற்கு அமைந்த உவமைகளாகும்.

பூரண அறிவு விளங்கி ஆன்மா இறைவன்வசமாய் ஒன்றுபட்டுக் கூடுங்கால், பண்டைய ஏகதேச அறிவுகெட்டுக் கூடுமோ? அன்றிக் கெடாது கூடுமோ? என ஐயந் தோன்றுதல் இயல்பே. ஏகதேச அறிவு கெட்டு இறைவனைக் கூடுமென்றால், அறிவாகிய உயிர்க்குணங்