பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/708

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

700

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


ஆணவமாகும் விஞ்ஞான கலருக்குப் பேணிய மாயைப் பிரளய கலராகும் ஆணவ மாயையுங் கன்ம மூன்றுமே கானுஞ் சகலர்க்குக் காட்டு மலங்களே” (2241)

"ஆணவத்தா ரொன்றறியாத கேவலர் பேனிய மாயைப் பிரளய கலராகும் கானும் உருவினர் காணாமை காண்டவே பூனுஞ் சகலர் முப்பாசமும் புக்கோரே” (2240)

எனவரும் திருமந்திரப் பாடல்களை அடியொற்றியதாகும். இத்திருமந்திரப் பாடல்களைக் கூர்ந்து நோக்குங்கால் ஆணவமலம் ஒன்றேயுடையவர் விஞ்ஞானகலர் எனவும், ஆணவம் மாயை என்னும் இருமலமுடையவர் பிரளயகலர் எனவும், ஆணவம் மாயைகன்மம் என்னும் மும்மல முடையவர் சகலர் எனவும் கூறும் கொள்கை திருமூலர் கருத்தாகுமோ என ஐயுற வேண்டியுளது. இவ்விரு பாடல் களின் பொருள்களும் மேலும் சிந்தித்தற்குரியன.

வேதம் சிவாகமம் என்னும் இருதிற நூல்களும் சிவபெருமானால் அருளிச் செய்யப் பெற்ற முதல் நூல்கள் எனவும், வேறுரைக்கும் எல்லா நூல்களும் இவற்றை முதலாகக் கொண்டு இயற்றப் பெற்ற வழிநூல்கள் எனவும், வேதம் உலகத்தார் உய்தற்பொருட்டுப் பொதுநூலாகவும், சிவாகமம் சத்திநிபாதர் உய்தற்பொருட்டுச் சிறப்புநூலாகவும் அருளிச் செய்யப்பெற்றன எனவும் அறிவு றுத்தும் முறையில் அமைந்தது,

"வேதநூல் சைவதால் என்றிரண்டே நூல்கள்

வேறுரைக்கும் நூல் இவற்றின் விரிந்த நூல்கள் ஆதிகால் அநாதியமலன் தருநூல் இரண்டும்

ஆரனநூல் பொது, சைவம் அருஞ்சிறப்பு நூலாம் நீதியினால் உலகர்க்கும் சத்தி நிபாதர்க்கும்

நிகழ்த்தியது. நீண்மறையினொழி பொருள் வேதாந்தத் தீதில் பொருள்கொண்டுரைக்கு நூல்.சைவம் பிறநூல்

திகழ்பூர்வம், சிவாகமங்கள் சித்தாந்தமாகும்” (267)