பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/710

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

702

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பனென்று

மொழிந்திடவும் உலகரெலாம் மூர்க்கராகிப் பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப்

பெருங்குழியில் விழுந்திடுவர் இதுவென்ன பிராந்தி’

(சித்தியார், சுபக். 268)

எனவரும் சிவஞானசித்தியார் மேற்குறித்த திருமந்திரப் பொருளையுணர்ந்து பயன்கொள்ளாத மக்களை நினைந்து இரங்கிக் கூறியதாதல் அறியத்தகுவதாகும்.

‘தானமியாகந்தீர்த்தம் (277) எனவரும் சிவஞான சித்தியாரில், அரன் முனிலாதொழியின் உற்பவித்து ஞான நெறியடைந்தடைவர் சிவனை என்ற தொடர் சரியை முதலிய சிவபுண்ணியங்களைச் செய்தவர்கள் போகத்தில் விருப்புடையராயின், விசிட்டமான கன்மபரிபாகத்தாலே புரியட்டக வுடலையெடுத்துப் பொல்லாதென்ற சகலயோனி களைப் புசித்துத் தொலைத்தவாறே பிரளயாகலராய்ப் பின்பு விஞ்ஞான கலராய் ஞானநெறியைத் தலைப்பட்டுச் சிவனடியை அடைவார்கள் என்பதனை அறிவுறுத்துவ தாகும். இது,

‘விஞ்ஞான கன்மத்தால் மெய்யட்டகங் هامة

பஞ்ஞான கன்மத்தாற் சகலயோனிபுக் கெஞ்ஞானமு மெய்தியிடையிட்டு மீண்டுபோய் விஞ்ஞான ராய்ச் சிவமேவுவதுண்மையே’ (499)

என்னும் திருமந்திரப்பாடலை உளங்கொண்டு கூறிய விளக்கமாகும்.

திருமூலர் காலத்தில் வேதம்வல்ல அந்தணர்களுக்குக் குடியிருப்பாக (ப்பிரமதேசமாக) அரசர்களால் ஊர்கள் தான ஞ் செய்யப்பெற்றறன. அவ்வாறு அந்தணர்க்கு ஊர்களைத் தானமாகக் கொடுப்பது இம்மை மறுமையிற் பெரும்பயன் விளைக்கும் என்ற நம்பிக்கை மன்னர்கள் மனத்தில் வழிவழியாகத் தொடர்ந்து நிலைபெற்று வந்துள்ளமை நம் நாட்டிலுள்ள கல்வெட்டுக்களாலும் செப்புப்பட்டயங்களாலும் நன்கு புலனாகின்றது.