பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/717

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

709


மானவர் அருணந்தி சிவாசாரியார் அருளிய சிவஞான சித்தியையும் பின்பற்றிக் கருத்திலுறை திருவருளும் இறைவன் நூலுங்கல்ந்து தாம் இயற்றிய சார்பு நூலுக்குச் சிவப்பிரகாசம் எனப் பெயரிட்டுள்ளளமை இங்குக் குறிப்பிடத்தகுவதாகும்.

திருமந்திரத்திலிருந்தும் மெய்கண்ட நூல்களி லிருந்தும் இதுகாறும் எடுத்துக்காட்டிய ஒப்புமைப் பகுதிகளைக் கூர்ந்து நோக்குங்கால் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞானபோதம், சிவஞானசித்தியார் உண்மைவிளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன் முதலிய சைவசித்தாந்தச் சாத்திரங்கள் எல்லாவற்றுக்கும் சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் பத்தாந்திருமுறையெனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரமே முதல் நூலாகத் திகழும் தனிச் சிறப்புடையதென்பது நன்கு புலனாதல் காணலாம்.