பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/723

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

715


காலத்தையடுத்துக் கி.பி. ஏழு எட்டாம் நூற்றாண்டுகளில் தோன்றிச் சிவநெறியினை வளர்த்த அருளாசிரியர்கள் சைவ சமய குரவர்கள் எனப் போற்றப்பெறும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மூவரும் எல்லாம் வல்ல இறைவனைப் பண்பொருந்தப் போற்றிப் பரவிய இன்னிசைச் செழும்பாடல்கள் தேவாரம் என்ற பெயரால் ஏழு திருமுறைகளாகப் பகுக்கப்பெற்றன என்பதும் அவற்றுள் ஆளுடையபிள்ளையாராகிய திருஞானசம்பந்தர் அருளிச் செய்த திருப்பதிகங்கள் ஒன்று, இரண்டு, மூன்றுஆம் திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் அருளிய திருப் பதிகங்கள் நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளாகவும், நம்பியாரூரராகிய சுந்தரர் அருளிய திருப்பதிகங்கள் ஏழாந்திருமுறையாகவும் வகுக்கப்பெற்றன என்பதும் மணிவாசகப்ப்ெருமானாகிய திருவாதவூரடிகள் அருளிய திருவாசகம் திருச்சிற்றம்பலக்கோவை என்னுமிரு நூல்களும் எட்டாந்திருமுறையாக வகுக்கப்பெற்றன என்பதும் அறிஞர் பலரும் நன்கறிந்த செய்திகளாகும். இறைவனருள் பெற்ற செம்புலச் செல்வராகிய இந்நால்வரும் சிவபரம்பொருளைப் பரவிப் போற்றிய திருவருளிலக்கிய மாகிய இத்தோத்திரப் பாடல்களில் கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொரு ளுண்மையும் அவற்றின் இலக்கணமும் மன்னுயிர்கள் இறைவனை வணங்கிப் பிறவிப் பிணிப்பி னின்றும் விடுபட்டு உய்தி பெறுதற்குரிய சாதனமும் இறைவன் திருவருளைப் பெற்றோர் அடையும் பேரின்ப நிலையாகிய வீடுபேற்றியல்பும் ஆகிய சைவசித்தாந்தத் தத்துவக் கொள்கைகள் இடம் பெற்றுள்ளன. திருவருள் ஞானம் பெற்ற பெருமக்கள் அருளிய சைவத் திருமுறை களாகிய இவ்வருள்நூல்களை அன்புடன் பயின்று சிவபரம் பொருளைச் சிந்தித்துப் போற்றும் சிவஞானச் செல்வர் களாகிய திருவியலூர் உய்வந்த தேவநாயனார் அவர்தம் மாணாக்கர்க்கு மானாக்கராகிய திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார், மெய்கண்ட தேவநாயனார், அவர்தம் மானாக்கர் அருணந்தி சிவாசாரியார், திருவதிகை மனவாசகங்கடந்தார், மறைஞான சம்பந்தர் மாணாக்கராகிய் உமாபதி சிவாசாரியார் ஆகிய பெருமக்கள் அருளிய திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞானபோதம் சிவஞானசித்தியார் முதலிய சைவசித்தாந்த